இந்த இணைப்பில் நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் காண்போம்.
சிக்னல் 11 பிழை segmentation fault என்றும் குறிப்பிடலாம். சிக்னல் 11 பிழை என்பது, ஒதுக்கப்படாத நினைவகத்தை நிரல் அணுகியது என்று பொருள்.
நிறுவலின்போது சிக்னல் 11 பிழை நேர காரணம், உங்கள் கணினியின் bus-ன் நினைவுக்கருவியில் வன்பொருள் பிழையாக இருக்கலாம். இயக்கும்நிரலில் பிரச்சினை, அல்லது கணினியின் வன்பொருள் பிரச்சினை, இவற்றால் நினைவுக்கருவியில் வன்பொருள் பிழை ஏற்படலாம். pSeries கணினிகளில், கணினியோடு கொடுக்கப்பட்ட வன்பொருள் ஆய்வுப்பொருள் உங்கள் வன்பொருள் பிரச்சினைகளை சுட்டிகாட்டும், (CPU அவசர நினைவுப்பிழை அல்லது நினைவுப்பிழை போன்ற சிக்கல்கள்)
Red Hat-லிருந்து புதிய நிறுவல் மேம்பாடுகள் மற்றும் பிம்பங்கள் உங்களிடம் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். புதிய பதிப்புகள் இருக்கின்றதா என்று வலைப்பக்கத்தில் பார்க்கவும். மிகப்புதிதான பிம்பங்களும் செயல்படவில்லையெனில், வன்பொருளில் சிக்கல் இருக்கலாம். பொதுவாக, இந்த பிழைகள் உங்கள் கணினிநினைவு அல்லது CPU இடைநினைவில் இருக்கலாம். firmware -இல் CPU-இடைநினைவை அணைத்துவிடுவது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியும். பிரச்சினை வெற்றிடங்களிலா அல்லது நினைவு அட்டையிலா என்று கண்டறிய மதர்போர்டில் நினைவு அட்டைகளை மாற்றிச் செலுத்திப்பார்க்கலாம்.
வெறும் 256 MB நினைவைக் கொண்டு நிறுவலை இயக்க முயன்று பார்க்கலாம். mem=256M என்ற துவக்க தேர்வுடன் நிறுவல் நிரலைத் துவக்குவதன் மூலம் இதைச்செய்யலாம். இந்த தேர்வை முயல, நிறுவல் ப்ராம்ப்ட்டில் கீழ்கண்டவாறு உள்ளிடவும்:
mem=xxxM |
இதில் xxx என்ற இடத்தில் நினைவின் அளவு, (மெகாபைட்டில்) வரவேண்டும்.
கவனிக்க, iSeries கணினி பயனர்கள், மற்ற இயங்குதளத்துக்கான கையேட்டில் பட்டியலிட்டுள்ளபடி, தொடக்க தேர்வுகளைச் சேர்க்க வேண்டும். இதற்கு முதலில் புரவல் OS/400 பங்கீட்டுக்குள் iSeries பயனராக உட்சென்று, பின் அவற்றிற்குண்டான பகிர்வின் NWSD க்குள் தேவையான IPL அளவுருக்களை அமைக்கவேண்டும்.
நிறுவல் சீடிராமின் மேல் ஊடகப்பரிசோதனையை செய்லாம். நிறுவல் ஊடகத்தின் முழுமையைச் சோதிக்கும் திறன் Red Hat Enterprise Linux நிறுவல் நிரலிக்கு உண்டு. CD, DVD, வன்தகடு ISO, மற்றும் NFS ISO நிறுவல் முறைகளோடு இது சரியாக இயங்கும். நிறுவலுக்குமுன், அல்லது நிறுவல்-தொடர்பான பிழை அறிவிக்கும் முன் எல்லா நிறுவல் ஊடகத்தையும் பரிசோதிக்க வேண்டும் என Red Hat பரிந்துரிக்கிறது. (அறிவிக்கப்படுகிற பிழைகளில் பல, சரியாக உருவாக்கப்படாத சீடிக்களால் ஏற்படுகின்றன). இந்த பரிசோதனையை உபயோகிக்க, boot: ப்ராம்ப்டில் கீழ்க்கண்ட கட்டளையை உள்ளிடவும் :
linux mediacheck |
கவனிக்க, iSeries கணினி பயனர்கள், மற்ற இயங்குதளத்துக்கான கையேட்டில் பட்டியலிட்டுள்ளபடி, தொடக்க தேர்வுகளைச் சேர்க்க வேண்டும். இதற்கு முதலில் புரவல் OS/400 பங்கீட்டுக்குள் iSeries பயனராக உட்சென்று, பின் அவற்றிற்குண்டான பகிர்வின் NWSD க்குள் தேவையான IPL அளவுருக்களை அமைக்கவேண்டும்.
சிக்னல் 11 பிழை பற்றி மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட வலைமனையை அணுகவும்:
http://www.bitwizard.nl/sig11/ |