Red Hat Enterprise Linux நிறுவல் கையேடு உங்களை வரவேற்கிறது. Red Hat Enterprise Linux 4 ஐ உங்கள் கணினியில் நிறுவ இந்த கையேடு உதவும். நிறுவலுக்கு உங்கள் கணினியை தயார்படுத்துவது முதல் Red Hat Enterprise Linux நிறுவத்தேவையான அனைத்து அடிப்படை தகவல்களையும் இந்த கையேடு படிப்படியாக விளக்கும்.
இந்த ஆவணத்தை படிக்கும் போது சில வார்த்தைகள் வேறு எழுத்துருவிலும் எழுத்துருவின் பாணி, அளவு மற்றும் பருமன் மாறுபட்டு இருக்கும். இந்த மாறுபாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையை குறிக்கும். இந்த வகைகள் பற்றி பார்போம்:
லினக்ஸ் கட்டளைகள்(மற்றும் மற்ற இயங்குதள கட்டளைகள்) இவ்வாறு குறிப்பிடப்படும். இந்த பாணி இந்த வார்த்தை அல்லது வாக்கியத்தை கட்டளை வரியில் உள்ளிட்டு
cat testfile கட்டளையை பயன்படுத்தி , testfile, என்ற பெயருள்ள கோப்பை புழகத்தில் உள்ள அடைவில் பார்த்தல்.
கோப்பின் பெயர், அடைவின் பெயர் பாதை மற்றும் RPM பணித்தொகுப்புகள் இவ்வாறு குறிப்பிடப்படும். இந்த பாணி, குறிப்பிட்ட பெயரில் கோப்பு அல்லது அடைவு உங்கள் கணினியில் உள்ளது என்பதை குறிப்பிடும். உதாரணங்கள்:
கோப்பில் இல்ல அடைவில் உள்ள .bashrc கோப்பில் பேஷ் ஷெல் விளக்கங்கள் இருக்கும்.
/etc/fstab கோப்பில் சாதனங்கள் மற்றும் கோப்பு அமைப்புகள் பற்றிய தகவலை பார்க்கலாம்.
இணைய சேவகன் பதிவேட்டை அலச விரும்பினால் webalizer RPM ஐ உங்கள் கணினியில் நிறுவவும்.
இந்த பாணி, நிரல் கடைசி -பயனர் பயன்பாட்டுக்கானது என்பதை குறிக்கும் (அமைப்புக்கோப்பு அல்லாத கோப்புகள்). உதாரணம்:
Mozilla வை பயன்படுத்தி இணையத்தை பார்த்தல்.
விசைப்பலகை விசைகள் இந்த பாணியில் இருக்கும். உதாரணம்:
இணைந்து செயல்பட வேண்டிய விசைப்பலகை விசைகள் இவ்வாறு குறிப்பிடப்படும். உதாரணம்:
GUI இடைமுக திரை அல்லது சாளரத்தில் உள்ள தலைப்பு, வார்த்தை அல்லது வாக்கியம் இவ்வாறு குறிப்பிடப்படும். இந்த பாணி, GUI திரை அல்லது GUI திரையில் உறுப்புகளில் (சோதனைப்பெட்டி போன்றவை) இந்த உரை உள்ளது என்பதை காட்டும் உதாரணம்:
உங்கள் திரைகாட்சியை நிறுத்த கடவுச்சொல் தேவை எனில் கடவுச்சொல் தேவை சோதனைப்பெட்டியை தேர்வு செய்யவும்
இந்த பாணி, வார்த்தை தேர்வு பட்டியலில் மேல்மட்டத்தில் உள்ளது என்பதை குறிப்பிடும், GUI திரையில் மேல்மட்ட மெனுவில் ஒன்றை க்ளிக் செய்தால், தொடர்புடைய மெனுக்கள் தோன்றும். உதாரணம்:
க்னோம் டெர்மினலில் கோப்பு என்பதை க்ளிக் செய்தால் தோன்றும் புதிய தத்தல் தேர்வு பல ஷெல் ப்ராம்டுகளை ஒரே சாளரத்தில் அனுமதிக்கும்.
GUI மெனுவில் பல கட்டளைகளை தட்டச்சு செய்ய விரும்பினால், பின்வருவனவற்றை பார்க்கவும்:
முதன்மை மெனு பட்டன் (பலகத்தில்) => நிரலாக்கம் => Emacs Emacs உரை தொகுப்பியை துவக்க.
இந்த பாணி, உரை GUI திரையில் க்ளிக் செய்து பார்க்ககூடிய வசதியுடன் உள்ளது என குறிப்பிடும். உதாரணம்:
பின் பட்டனை க்ளிக் செய்து கடைசியாக பார்க்க விரும்பும் இணைய பக்கத்திற்கு செல்லவும்.
இந்த பாணியில் உள்ள உரைகள், ஷெல் ப்ராம்டில் காட்டப்பட்ட பிழை செய்திகள் பதில்கள் போன்றவைகளை குறிக்கும் உதாரணம்:
ls அடைவில் உள்ள கோப்புகளை பார்க்க பயன்படும். உதாரணம்:
Desktop about.html logs paulwesterberg.png Mail backupfiles mail reports |
ls கட்டளையின் விளைவு (அடைவில் உள்ள கோப்புகள்) இந்த பாணியில் காட்டப்படும்.
ப்ராம்ட், தகவல்களை உள்ளிட தயாராக உள்ளது என குறிப்பிடும் பாணி. உதாரணம்:
$
#
[stephen@maturin stephen]$
leopard login:
பயனர் தட்டச்சு செய்யவேண்டிய உரை, கட்டளைவரி, அல்லது GUI திரையில் உள்ள உரைஉள்வாங்கும் பெட்டி ஆகியவை இந்த பாணியில் இருக்கும். கீழ்கண்ட உதாரணத்தில் text இவ்வாறு காட்டப்படும்.
உங்கள் கணியை உரை முறை நிறுவல் நிரலில் துவக்க, text ஐ boot: ப்ராம்டில் தட்டச்சு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்காக பயன்படுத்தப்பட்ட உரை , கொடுக்கப்பட்ட தகவலால் மாற்றப்படும் என்பதை இந்த பாணி குறிக்கும். கீழ்கண்ட உதாரணம் <version-number> இவ்வாறு குறிப்பிடப்படும்.
கர்னலுக்கான நிரல் உள்ள அடைவு /usr/src/<version-number>/, இங்கே <version-number> நிறுவப்பட்ட கர்னலின் பதிப்பால் மாற்றப்படவேண்டும்.
மேலும், நாங்கள் பல எளிய முறைகளை பயன்படுத்தி சில பகுதிகளில் உங்கள் கவனத்தை கவர முயற்சி செய்திருக்கிறோம், தகவலின் முக்கியத்துவத்தை பொருத்து இவைகள் குறிப்பு, முக்கியம் எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணம்:
![]() | குறிப்பு |
|---|---|
லினக்ஸ் பெரிய எழுத்து சிறிய எழுத்து ஆகியவைகளை மாறுபடுத்தி காட்டும், லினக்ஸில் rose , ROSE மற்றும் rOsE ஆகியவை வெவ்வேறாக எடுத்துக்கொள்ளும். |
![]() | சிறு குறிப்பு |
|---|---|
/usr/share/doc/ அடைவில், நிறுவப்பட்ட பணித்தொகுப்புகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இருக்கும். |
![]() | முக்கியம் |
|---|---|
DHCP அமைப்பு கோப்பை மாற்றினால், DHCP டெமானை மீண்டும் துவக்கும் வரை மாற்றங்கள் செயல்முறைக்கு வராது. |
![]() | முன்னெச்சரிக்கை |
|---|---|
தினப்படி வேலைகளை root — பயனராக செய்ய வேண்டாம். கணினி மேலாண்மை பணிகள் தவிர பிற பணிகளுக்கு சாதாரண பயனர் கணக்கை பயன்படுத்தவும். |
![]() | எச்சரிக்கை |
|---|---|
கவனமாக தேவையான Red Hat Enterprise Linux பகிர்வுகளை மட்டும் நீக்கவும். மற்ற பகிர்வுகளை நீக்குவதால் தகவல் இழப்பு நேரலாம். |