| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
Red Hat Enterprise Linux ஐ CD-ROM லிருந்து நிறுவ, CD-ROM ஐ தேர்வு செய்து சரி பட்டனை அழுத்தவும். செய்தி வரும்போது, Red Hat Enterprise Linux ஐ CD-ROM இயக்கியில் சொருகவும் (CDயிலிருந்து துவங்கவில்லையெனில்). CD-ROM இயக்கியில் உள்ள CD தேர்வு செய்யப்பட்டதும் சரி, பட்டனை அழுத்து பின்
![]() | குறிப்பு |
|---|---|
நிறுவல் நிரலை துவக்க முதல் CD-ROM அவசியம் , நிறுவலை தொடர அடுத்தடுத்த CD-ROM களை பயன்படுத்தவும் |
உங்கள் நிறுவல் நிரல் கணினியில் உள்ள CD-ROM இயக்கியை தானாகவே கண்டுபிடிக்க முயலும். IDE (ATAPI என்றும் அழைக்கப்படும்) யில் CD-ROM யை தேட முயலும். கிடைத்ததும். நிறுவலின் அடுத்தகட்டத்திற்கு செல்லும். (பார்க்க பகுதி 2.10).
![]() | குறிப்பு |
|---|---|
இந்த நிலையில் நிறுவலை ரத்து செய்ய iSeries பயனர்கள் NWS ஐ மாற்ற வேண்டும் மற்றவர்கள் கணினியின் ரிஸ்டார்ட் பட்டனை பயன்படுத்த வேண்டும். |
non-iSeries கணினிகளுக்கு மட்டுமே கீழ்கண்டவை பொருந்தும்:
CD-ROM இயக்கி கண்டுபிடிக்க படவில்லையெனில் இது SCSI CD-ROM, நிறுவல் நிரல் SCSI இயக்கியை தேர்வு செய்யும் படி நினைவூட்டும். உங்கள் ஏற்பிக்கு பொருந்தக்கூடிய இயக்கியை தேர்வு செய்யவும்.தேவைப்பட்டால் இயக்கிக்கான தேர்வையும் குறிப்பிடவும், பெரும்பாலான சாதனங்கள் SCSI எற்பியை தானாக கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை.
![]() | சிறு குறிப்பு |
|---|---|
CD-ROM களின் பட்டியலை பார்க்க, Red Hat Enterprise Linux குறிப்பு வழிகாட்டி லும் பொது அளவுரு பகுதியிலும் உள்ள இணைப்பை பார்க்கவும். |
உங்களிடம் IDE (ATAPI) CD-ROM இருந்தால் , நிறுவல் நிரல் IDE (ATAPI) CD-ROM கண்டுபிடிக்க முடியாமல் உங்கள் CD-ROM இயக்கியின் வகை என்ன என கேட்கும். நிறுவலை மீண்டும் தொடர்ந்து boot: ப்ராம்டில் கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்linux hdX=cdrom. Xஐ மாஸ்டர் அல்லது ஸ்லேவ் (முதன்மை அல்லது இரண்டாது எனவும் அழைக்கப்படும்) இடைமுகத்தை பொருத்து கீழ்கண்ட எழுத்தாக மாறும், .
a — முதல் IDE கட்டுப்படுத்தி, மாஸ்டர்
b — முதல் IDE கட்டுப்படுத்தி, ஸ்லேவ்
c — முதல் IDE கட்டுப்படுத்தி, மாஸ்டர்
d — முதல் IDE கட்டுப்படுத்தி, ஸ்லேவ்
உங்களிடம் மூன்றாவது மற்றும்/அல்லது நான்காவது கட்டுப்படுத்திகள் இருந்தால், அவைகளுக்கான எழுத்துக்களை வரிசைப்படி கட்டுப்படுத்தியிலிருந்து கட்டுப்படுத்திக்கும் மற்றும் மாஸ்டரிலிருந்து ஸ்லேவுக்கும் அமைக்கவும்