2.7. FTP வழியாக நிறுவுகிறது

FTP உரையாடல் பெட்டி, FTP சேவகன் வழியாக நிறுவ முயலும் போது தோன்றும்.(இதற்கு FTPவழியாக என்பதை நிறுவல் முறை யில் தேர்வு செய்திருப்பீர்கள்). இந்த உரையாடல் FTP சேவகன் மற்றும் நிறுவ விரும்பும் Red Hat Enterprise Linux. ஆகியவைகளை அனுமதிக்க உதவும்.

படம் 2-6. FTP அமைப்பு உரையாடல்

நீங்கள் பயன்படுத்தும் FTP தளத்தின் பெயர் மற்றும் IP முகவரியையும் RedHat/ கோப்பு உள்ள அடைவையும் குறிப்பிடவும். உதாரணமாக, FTP தளத்தில் உள்ள அடைவு /mirrors/redhat/arch/RedHat/ எனில் /mirrors/redhat/arch/ என உள்ளிடவும் (இங்கு arch கட்டமைப்பு வகையால் அதாவது i386, ia64, ppc, அல்லது s390 ஆல் மாற்றப்படும்). எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தால் base/hdlist பெறப்பட்டதற்கான செய்தி காட்டப்படும்.

அடுத்து, வரவேற்பு உரையாடல் பெட்டி தோன்றும்.

குறிப்புகுறிப்பு
 

ஏற்கெனவே நகலெடுக்கப்பட்ட ISO பிம்பத்தை கொண்டு வட்டின் இடங்களை சேமிக்கலாம். இதை செய்ய, ரெட் ஹாட் என்டர்ப்ரைஸ் லினக்ஸ் ISO பிம்பத்தை ஒரு ட்ரீயில் லூப்பேக் முறையில் ஏற்ற வேண்டும்.

mkdir discX

mount -o loop example-1.iso discX