2.14. உங்கள் கணினியில் பகிர்வை உருவாக்குதல்

நீங்கள் தானாக பகிர்வு செய்வதை தேர்வு செய்திருந்தால்,மீண்டும் பார் என்பதை தேர்வு செய்யவில்லையெனில் பகுதி 2.15 க்கு செல்லவும்.

தானாக பகிர்வு செய்வதை தேர்வு செய்து மீண்டும் பார் என்பதை தேர்வு செய்திருந்தால்; தற்போதைய பகிர்வை ஏற்கலாம்(அடுத்து பட்டனை க்ளிக் செய்யவும்), அல்லது வட்டு ரூயிட் ஐ பயன்படுத்தி கைமுறையாக பகிர்வை உருவாக்கலாம்.

நிறுவல் நிரலில் Red Hat Enterprise Linux எங்கே நிறுவ வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். Red Hat Enterprise Linuxநிறுவப்பட வேண்டிய இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏற்றப்புள்ளிகளை குறிப்பிடுவதன் மூலம் இதை செய்யமுடியும்.

குறிப்புகுறிப்பு
 

உங்கள் பகிர்வுகளை எப்படி உருவாக்குவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையெனில் இணைப்பு C மற்றும் பகுதி 2.14.4ஐ பார்க்கவும். குறைந்த பட்சம் root பகிர்வின் அளவையும், (/) , /boot/பகிர்வையும் குறிப்பிடவேண்டும் iSeries அல்லாத கணினியில் (iSeries /boot/ பகிர்வு தேவையில்லை), PPC PReP துவக்க பகிர்வு, மற்றும் ஸ்வாப் பகிர்வு RAM அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

iSeries பயனர்களுக்கு மட்டும்:

PReP துவக்க அடைவை முதன்மை அல்லது காப்பு துவக்க முறையாக அமைப்பது நல்லது PReP பகிர்வின் அளவு 16 முதல் 32 MB வரை இருக்க வேண்டும் மேலும் முதன்மை பகிர்வு செயலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

படம் 2-12. வட்டு ரூயிட் iSeries கணினியில் பகிர்வை உருவாக்குகிறது

படம் 2-13. வட்டு ரூயிட் இன் pSeries கணினிக்கான பகிர்வு

வட்டு ரூயிட் நிறுவலின் போது பயன்படுத்தப்படும் வட்டு பகிர்வு கருவி. வட்டு ரூயிட் தேவையான சூழலுக்கு ஏற்ப பகிர்வுகளை உருவாக்க பயன்படும் சாதனம்.

2.14.1. வன்தகடு(கள்) வரைகலை காட்சி

வட்டு ரூயிட் உங்கள் வன்தகடு(கள்) எப்படி இருக்கும் என காட்டும்.

குறிப்பிட்ட புலத்தை தனிப்படுத்த, உங்கள் சுட்டியை பயன்படுத்தி ஒருமுறை க்ளிக் செய்யவும். ஏற்கெனவே உள்ள புலத்தில் திருத்தம் செய்ய இரண்டு முறை க்ளிக் செய்யவும் அல்லது காலி இடத்தில் புதிய பகிர்வை உருவாக்க.

காட்சிக்கு மேல் இயக்கி பெயர் (அதாவது /dev/hda ), Geom (இதில் வன்தகட்டின் 3 வடிவமைப்புகள் இருக்கும் அதாவது சிலிண்டர்கள்,தலைகள் மற்றும் செக்டார்கள்), மற்றும் நிறுவல் நிரல் கண்டறிந்த வன்தகட்டின் மாதிரி ஆகியவை இருக்கும்.

2.14.2. வட்டு ரூயிட் பட்டன்

இந்த பட்டன் கட்டுபடுத்தி வட்டு ரூயிட்செயல்கள், பகிர்வின் பண்புகளை மாற்ற (உதாணமாக கோப்பு வகை ஏற்ற புள்ளி ) மற்றும் RAID சாதனங்களை உருவாக்க பயன்படும். நீங்கள் செய்த மாற்றங்களை ஏற்கவும், வட்டு ரூயிட் லிருந்து வெளியேறவும் இந்த திரையில் உள்ள பட்டன்கள் பயன்படும்.

2.14.3. பகிர்வு புலங்கள்

பகிர்வு வரிசைக்கு மேல் உங்கள் பகிர்வு மற்றும் அவைகள் உருவாக்கம் பற்றிய தகவல் அடங்கிய அடையாள சீட்டு இருக்கும். இந்த அடையாளங்கள் கீழ்கண்டது போல் குறிக்கப்படும்.

RAID சாதனத்தை மறை/LVM அளவு குழு உறுப்பினர்கள்: RAID சாதனங்கள் அல்லது LVM குழு உறுப்பினர்களை உருவாக்கும்.

2.14.4. பரிந்துரைக்கப்பட்ட பகிர்வு வகை

சரியான காரணத்தை குறிப்பிடவில்லையெனில் , கீழ்கண்ட பகிர்வுகளை உருவாக்க பரிந்துரைக்கிறோம்.

2.14.5. பகிர்வை சேர்த்தல்

புதிய பகிர்வை சேர்க்க புதிய பட்டனை தேர்வு செய்யவும். A உரையாடல் பெட்டி தோன்றும் (படம் 2-14 பார்க்கவும்).

குறிப்புகுறிப்பு
 

இரண்டு பகிர்வுகள் நிறுவலுக்கு ஒரே ஒரு பகிர்வையாவது குறிப்பிடவேண்டும் அதிக தகவலுக்கு இணைப்பு C.பாக்கவும்

படம் 2-14. புதிய பகிர்வை உருவாக்குகிறது

2.14.5.1. கோப்பு அமைப்பு வகை

Red Hat Enterprise Linux கோப்பு அமைப்பை பொருத்து பகிர்வை உருவாக்க அனுமதிக்கும் மென்பொருள். பலவகையான கோப்பு அமைப்புகளையும் அவைகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் கீழே காணலாம்.

  • ext2 — ext2 கோப்பு அமைப்பு நிலையான யூனிக்ஸ் கோப்பு ஆதரவு கொண்டது (கோப்புகள், அடைவுகள், இணைப்புகள், இன்னபிற). இது நீளமான 255 எழுத்துவரையுள்ள கோப்பு பெயர்களை அனுமதிக்கும்,

  • ext3 — ext3 கோப்பு அமைப்பு ext2 வை அடிப்படையாக கொண்டது ஆனால் இதில் ஆவணமாக்கல் வசதி உள்ளது — இந்த வசதியை பயன்படுத்தி நொறுங்கிய கோப்புகளையும் fsck[1]. ext3 ஐ தேர்வு செய்யும் படி பரிந்துரைக்கப்படுகிறது

  • பிசிக்கல் வால்யூம்(LVM)— ஒன்றுக்கும் பிசிக்கல் வால்யூம் (LVM) பகிர்வுகள் LVM லாஜிக்கல் வால்யூம்களை உருவாக்க பயன்படும். LVM உங்கள் வட்டில் செயல்திறனை அதிகரிக்கும் LVM, பற்றிய கூடுதல் தகவலுக்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்க்கவும்.

  • மென்பொருள் RAID — இரண்டுக்கும் மேற்பட்ட RAID பகிர்வுகளை உருவாக்குவதால் RAID சாதனத்தை உருவாக்க முடியும். RAID பற்றிய கூடுதல் தகவலுக்கு, Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு உள்ள RAID (Redundant Array of Independent Disks) ஐ பார்க்கவும்.

  • ஸ்வாப் — ஸ்வாப் பகிர்வுகள் மெய்நிகர் நினைவக ஆதரவிற்கு பயன்படுகின்றன.RAM செயல்பாட்டில் இருப்கும் போது போதிய வேலைகளை செய்ய இடமில்லாத போது தகவல்கள் ஸ்வாப் பகிர்வில் எழுதப்படும். கூடுதல் தகவலுக்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்க்கவும்

  • vfat — VFAT மைக்ரோசாப்ஃட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இரண்டிற்கும் பொதுவான கோப்பு அமைப்பு முறை.

  • PPC PReP Boot — PPC PReP துவக்க பகிர்வில் இயங்குதளத்தின் கர்னல் *NWSSTG IPL லிருந்து துவக்க iSeries) அல்லது YABOOT துவக்க இயக்கி இருக்கும் (இது உங்கள் pSeries கணினிகளை Red Hat Enterprise Linux துவக்கும்).

2.14.6. பகிர்வை திருத்துதல்

பகிர்வில் மாற்றம் செய்ய அதை தேர்வு செய்து திருத்து பட்டனை க்ளிக் செய்யவும்.

குறிப்புகுறிப்பு
 

உங்கள் வன்தகட்டில் இந்த பகிர்வு ஏற்கெனவே இருந்தால், அதன் ஏற்ற புள்ளியை மாற்ற மட்டும் முடியும். மேலும் மாற்றங்கள் செய்ய பகிர்வை நீக்கிவிட்டு மீண்டும் உருவாக்கவும்

2.14.7. பகிர்வை நீக்குதல்

பகிர்வை நீக்க பகிர்வுகள் தேர்வில் நீக்க வேண்டியதை தனிப்படுத்தி தேர்வு செய்து நீக்கு பட்டனை அழுத்தவும். நீக்கலை உறுதிப்படுத்தவும்

குறிப்புகள்

[1]

The fsck பயன்பாட்டை கொண்டு கோப்புகளை பழுதுபார்த்து அவைகளின் மெட்டாதகவல்களை சரி செய்து கோப்புகளை திரும்ப பெற முடியும்.