| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
Red Hat Enterprise Linux உரை முறை நிறுவல் திரை-அடிப்படையிலான சிறு சாளர widgets வரைகலை பயனர் இடைமுகத்தை பயன்படுத்துகிறது படம் 2-2, மற்றும் படம் 2-3, நிறுவலின் போது திரை எவ்வாறு இருக்கும் என பார்க்கலாம்.
![]() | குறிப்பு |
|---|---|
உரை முறை நிறுவல் பற்றிய ஆவணங்கள் சரிவர இல்லை எனில் GUI நிறுவல் நிரலில் உள்ள ஆவணங்களை பின்பற்றி உரை நிறுவலை புரிந்துகொள்ளலாம். |
இங்கே முக்கியமான சிறுசாளரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது படம் 2-2 மற்றும் படம் 2-3:
சாளரம் — சாளரங்கள்(இந்த கையேட்டில் உரையாடல்பெட்டி என குறிப்பிடப்பட்டிருக்கும்) நிறுவலின் போது திரையில் தோன்றும். சில சமயங்களின் ஒரு சாளரத்தின் மேல் வேறொறு சாளரம் இருக்கும் இதில் மேல் உள்ள சாளரத்தை பயன்படுத்த வேண்டும். வேலைமுடிந்ததும் மேலுள்ள சாளரம் தானாக மூடப்பட்டு கீழுள்ள சாளரம் தெரியும்.
சோதனைப்பெட்டி — சோதனைப்பெட்டி தேர்வு செய்ய மற்றும் தேர்வு நீக்க பயன்படும். இதில் நட்சத்திர குறி உள்ள (தேர்வு செய்யப்பட்ட) அல்லது காலி(தேர்வு செய்யப்படாத) பெட்டிகள் இருக்கும். சோதனைப்பெட்டிக்குள் சென்று
உரை உள்ளீடு — நிறுவல் நிரலுக்கான தகவலை உள்ளிட உரை வரிகள் பயன்படும். கர்சர் வரியில் இருக்கும் போது அவ்வரியில் தகவலை உள்ளிட அல்லது திருத்த முடியும்
உரை சிறுசாளரம் — உரையை திரையில் காட்ட உரை சிறு சிறு சாளரம் பயன்படும். உரை சிறு சாளரத்தில் சோதனைப்பெட்டிகள் இருக்கலாம். இந்த சிறு சாளரத்தில் அதிக தகவல் இருந்தால் திரையில் உருள்பட்டி தெரியும். உரை சாளரத்திற்குள் கர்சரை பொருத்தினால்
உருள் பட்டி — உருள்பட்டி சாளரத்தின் ஓரத்தில் அல்லது கீழே இருக்கும். இது தற்போதைய சாளரத்தின் சட்டத்தில் உள்ள பட்டியலை கட்டுப்படுத்த பயன்படும். கோப்பின் பல பாகங்களில் நகர இந்த உருள்பட்டி பயன்படும்.
பட்டன் சாளரம் — நிறுவல் நிரலோடு தொடர்புகொள்ள பட்டன்கள் பயன்படும். இந்த பட்டனை பயன்படுத்தி நிறுவலை தடையின்றி தொடர முடியும். இதற்கு
கர்சர் — கர்சர் குறிப்பிட்ட சாளரத்தை தேர்வு செய்ய(அதனுடன் தொடர்புகொள்ளவும்) பயன்படும். கர்சர் ஒரு சாளரத்திலிருந்து மற்றதற்கு மாறும் போது சாளரத்தின் நிறம் மாறும் அல்லது கர்சர் சாளரத்தில் நிலைகொண்டுள்ள அடையாளம் தெரியும். படம் 2-2, இல் கர்சர் சரி பட்டனின் மேல் இருப்பதை காணலாம். படம் 2-3, இல் கர்சர் திருத்து பட்டனின் மேல் உள்ளது.
சில விசைப்பலகை விசைகளை பயன்படுத்தி நிறுவல் நிரலில் சுலபமாக உலாவ முடியும்.
பட்டனை "அழுத்த" , கர்சரை பட்டனின் மேல் வைத்து (உதாரணமாக
![]() | எச்சரிக்கை |
|---|---|
நிறுவலின் போது உரையாடல் பெட்டி உரைக்காக காத்திருக்கும் போது வேறு எந்த விசையும் செயல்படாது.(வேறு விசைகள் செயல்பட்டால் உத்தேசிக்க முடியாத செயல்கள் நிகழலாம்) |