| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
உங்கள் கணினி துவங்கவில்லை எனில் நிறுவல் வட்டை மீட்பு பாங்கில் பயன்படுத்தலாம். மீட்பு பாங்கு உங்கள் வட்டின் பகிர்வுகளை அலச அனுமதிப்பதோடு உங்கள் நிறுவலை மீட்க உதவும்.
மின்கட்டுப்பாடு NWSD உடன் iSeries மற்றும் i5 கணினிகளை மீட்பு பாங்கில் பயன்படுத்த , கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி நிறுவல் நிரலை துவக்கவும். NWSD இல் IPL அளவுரு புலத்தில் 'rescue'(மேற்கோள் குறி அவசியம்), அல்லது SCSI இயக்கியை ஏற்ற விரும்பினால் 'dd rescue'என உள்ளிடவும். மற்ற கணினிகளில் YABOOT இல் உள்ள இயல்பான கர்னல் பெயருக்கு பிறகு rescue அல்லது dd rescue(மேற்கோள் குறி இல்லாமல்) என குறிப்பிடவும்.
திரையில் மொழியை தேர்வு செய்த பின் (பகுதி 2.10), நிறுவல் நிரல் வட்டை பகிர்வில் எற்ற முயலும். பின் வரும் ஷெல் ப்ராம்டில் தேவையான மாற்றங்களை நீங்கள் செய்து கொள்ளலாம். இந்த மாற்றத்தை (பகுதி 2.23) பகுதியில் குறிப்பிட்ட கர்னல் மற்றும் கட்டளைகளை IPL மூலத்தில் சேர்ப்பதும் அடங்கும்.
தேவையான மாற்றங்களை செய்து முடித்ததும், exit 0 கட்டளையை பயன்படுத்தி நிறுவலில் இருந்து வெளியேறலாம். இது C பக்கதிலிருந்து மீண்டும் துவக்க செய்யும்.A அல்லது B பக்கத்திலிருந்தோ அல்லது NWSSTG, லிருந்தோ மீண்டும் துவக்க ஷெல்லிருந்து வெளுயேறுவதற்கு பதில் கணினியை மாற்றலாம்.
உங்கள் கணினியில் நேட்டிவ் DASD வட்டு இருந்தால், SCSI சாதனங்களை மீட்பு பாங்கில் அணுக முடியும். இந்த பயன்பாடுகள் இயக்க வட்டு CD யில் இருக்கும். தனிப்பட்ட முயற்சியில்லாமல் இயக்க வட்டு CD களை மீட்பு பாங்கில் ஏற்ற முடியாது. இவை பற்றி கீழே விளக்கப்பட்டுள்ளது.
உங்கள் லினக்ஸ் கணினியில் CD-ROM இயக்கி ஒதுக்கப்பட்டிருந்தால், இயக்க வட்டு CD யை இரண்டாது இயக்கியாக ஏற்றலாம்.
உங்களிடம் CD-ROM இயக்கி மட்டுமே இருந்தால், NFS துவக்கத்தை அமைத்து கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்
ஓப்பன் பவர், p5, i5, மற்றும் pSeries கணினிகளுக்கு:
CD-ROM லிருந்து linux rescue askmethod கட்டளையை பயன்படுத்தி துவக்கவும், இதம் மூலம் CD-ROM இயக்கியை பயன்படுத்துவதற்கு பதிலாக கைமுறைகாக NFS வழியாக மீட்பு பாங்கிற்கான கோப்புகளை அணுக முடியும்
iSeries கணினிகளுக்கு:
/qopt/red_hat/ppc/iSeries/boot.img ஐ உங்கள் iSeries லினக்ஸ் கணினியின் IFS இல் நகலெடுக்கவும். இதை சில கட்டளைகளால் செய்ய முடியும்
COPY OBJ ('/qopt/red_hat/ppc/iSeries/boot.img') TODIR('/tmp') |
குறிப்பு /tmp உங்கள் IFS இன் பாதையால் மாற்றிக்கொள்ளவும்.
முதல் நிறுவல் வட்டை உங்கள் மற்ற லினக்ஸ் கணினி அல்லது வேறு லினக்ஸ் கணினியில் பிரதியெடுக்கவும்.
இந்த நிறுவல் நிரலை NFS அல்லது FTP யில் படியெடுக்கவும்
மீட்கவேண்டிய கணினியை வேற்றுமைப்படுத்தவும் அல்லது நிறுத்தவும். அவைகளின் IPL அளவுருக்களை நிறுவல் நிரலை மீட்பு பாங்கில் தொடங்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அமைக்கவும். தவிர IPL மூலம் உங்கள் IFS இன் boot.img இன் படியை நோக்கியிருக்க வேண்டும்(படி 1, அதற்கு மேல்)
நிறுவல் வட்டு உங்கள் CD-ROM இயக்கியில் இருக்க கூடாது.
IPL லினக்ஸ் கணினி
பகுதி 2.25 இல் குறிப்பிட்டது போல ப்ராம்டில் தொடரவும்.நிறுவல் மூலத்திற்கான கூடுதல் ப்ராம்ட் தோன்றும். NFS அல்லது FTP ஐ தேர்வு செய்து(துள்ளியமாக) கீழ்கண்ட வலைப்பின்னல் அமைப்புகளை செய்து முடிக்கவும்.
லினக்ஸ் கணினி மீட்பு பாங்கில் துவங்கியதும், பயன்படுத்துவதற்கான CD-ROM இயக்கி கிடைக்கும். இதனால் SCSI பயன்பாடுகளை இயக்கி ஊடகத்தில் ஏற்றி பயன்படுத்தலாம்.