| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
இந்த கணினியில் பல மொழிகளை நிறுவ மற்றும் இயக்க ஆதரவு உண்டு
இயல்பாக பயன்படுத்த வேண்டிய மொழியை தேர்வு செய்யவும். நிறுவல் முடிந்ததும் கணினி துவங்கும் மொழியே இயல்பான மொழியாகும். பொதுவாக இயல்பான மொழி நிறுவலின் போது தேர்வு செய்யப்படும்.
நிறுவலின் போது மற்ற மொழிகளை தேர்வு செய்திருந்தால், நிறுவலுக்கு பின் இயல்பான மொழியை மாற்ற முடியும். நீங்கள் ஒரே ஒரு மொழியை மட்டும் பயன்படுத்த விரும்பினால் அதை மட்டும் தேர்வு செய்வதன் மூலம் வன்தகட்டில் அதிக இடம் எடுத்துக்கொள்ளாமல் செய்யலாம்.
![]() | எச்சரிக்கை |
|---|---|
ஒரு மொழியை மட்டும் தேர்வு செய்தால் நிறுவிய பின் அந்த மொழியை மட்டுமே பயன்படுத்த முடியும் |
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியை உங்கள் கணினியில் பயன்படுத்த, குறிப்பிட்ட மொழிகளை தேர்வு செய்யவும் அல்லது Red Hat Enterprise Linux இல் உள்ள அனைத்து மொழிகளையும் தேர்வு செய்யவும்.
மீட்டமை பட்டனை பயன்படுத்தி உங்கள் தேர்வுகளை ரத்து செய்யவும். மீட்டமைப்பதால் பழைய நிலைக்கு செல்வதோடு நிறுவ தேர்வு செய்யப்பட்ட மொழியை மட்டுமே நிறுவும்
![]() | குறிப்பு |
|---|---|
நிறுவல் முடிந்ததும் மொழியை மாற்ற மொழி அமைப்பு கருவி ஐ பயன்படுத்தவும். system-config-language கட்டளையை ஷெல் ப்ராம்டில் தட்டச்சு செய்து மொழி அமைப்பு கருவி ஐ துவக்கவும். நீங்கள் root இல்லையெனில் அதற்கான கடவுச்சொல் கேட்கும். |