B.4. நிறுவிய பின் ஏற்படும் சிக்கல்கள்

B.4.1. NWSSTG லிருந்து IPL முடியவில்லை

NWSSTG யிலிருந்து IPL முயலும் போது சிக்கல் ஏற்பட காரணம் நீங்கள் PReP துவக்க பகிர்வை செயலில் உள்ள என குறிப்பிட்டிருக்கலாம்.

B.4.2. வரைகலை இடைமுகத்தில் துவங்குகிறது

iSeries கணினி பயன்படுத்துபவர்களுக்கு இந்த தகவல் பொருந்தாது

நீங்கள் X ஐ நிறுவி Red Hat Enterprise Linux ஐ துவக்கும் போது X விண்டோஸ் தோன்றவில்லை எனில் , startx, கட்டளையை பயன்படுத்தி கணினியை துவக்கலாம்

கட்டளையை உள்ளிட்டு [Enter] விசையை அழுத்தியதும் மேல்மேசை தோன்றும்

குறிப்பு, இதை ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டிய செயலாகும்

உங்கள் கணினியில் உள்நுழையும் திரையை அமைக்க /etc/inittab கோப்பில் உள்ள runlevel பகுதியில் உள்ள எண்ணை மாற்ற வேண்டும். மாற்றிய பின் கணினியை துவக்கினால் உள்நுழை திரை பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும்.

ஷெல் ப்ராம்டை திறந்து பயனர் கணக்கில் நுழைந்திருந்தால் முதன்மை பயனர் கணக்குக்கு மாற su கட்டளையை பயன்படுத்தவும்.

இப்போது; gedit /etc/inittab என தட்டச்சு செய்து gedit தொகுப்பியில் மாற்றங்கள் செய்வதற்காக /etc/inittab கோப்பு திறக்கும். கீழே உள்ளது போன்ற கோப்பின் பகுதி தெரியும்.

# Default runlevel. The runlevels used by RHS are:
#   0 - halt (Do NOT set initdefault to this)
#   1 - Single user mode
#   2 - Multiuser, without NFS (The same as 3, if you do not have networking)
#   3 - Full multiuser mode
#   4 - unused
#   5 - X11
#   6 - reboot (Do NOT set initdefault to this)
# 
id:3:initdefault:

கன்சோல் உள்நுழைவிலிருந்து திரைவழியாக உள் நுழைய . கீழ்கண்ட வரி எண்களை மாற்றவும். id:3:initdefault:3 லிருந்து 5 க்கு மாற்றவும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

runlevel இன் எண்ணை மறட்டும் 3 லிருந்து 5 ஆக மாற்றவும்

மாற்றிய வரிகள் பின்வருமாறு இருக்க வேண்டும்

id:5:initdefault:

நீங்கள் செய்த மாற்றத்தில் திருப்தி இருந்தால், [Ctrl]-[Q] விசையை அழுத்தி வெளியேறவும். இவ்வாறு வெளியேறும் போது உரையாடல் பெட்டி தோன்றி சேமிக்கவா என கேட்கும் சேமி பட்டனை க்ளிக் செய்து சேமிக்கவும்.

அடுத்த முறை கணினியை துவக்கும் போது உள்நுழைவதற்கான திரை தோன்றும்

B.4.3. X விண்டோஸ் கணினி(GUI) இல் உள்ள சிக்கல்கள்

X (X விண்டோஸ் கணினி) யை துவக்குவதில் சிக்கல் இருந்தால் ஒரு வேலை நிறுவலின் போது X ஐ தேர்வு செய்யாமல் விட்டிருக்கலாம்.

X ஐ நிறுவ விரும்பினால் Red Hat Enterprise Linux CD-ROM லிருந்து அதற்கான பணித்தொகுப்பை நிறுவலாம் அல்லது உங்கள் கணினியை மேம்படுத்தலாம்.

மேம்படுத்து என்பதை தேர்வு செய்திருந்தால், X விண்டோஸ் கணினி பணித்தொகுப்பை தேர்வு செய்து, GNOME, KDE அல்லது இரண்டையும் தேர்வு செய்து மேம்படுத்தலை தொடரவும்.

B.4.4. ரூட் அல்லாத பயனர்களின் X சேவகனில் சிதைவு ஏற்பட்டதா?

X சேவகனை ரூட் ஆக இல்லாமல் சாதாரண பயனராக பயன்படுத்தும் போது சிதைவு ஏற்பட்டால், முழு கோப்பு அமைப்பு அனுமதிகளும் உங்களுக்கு தேவை (அல்லது, வன்தகட்டில் இடமில்லாமல் இருக்கலாம்).

உங்கள் சிக்கலை சரிவர தெரிந்துகொள்ள கீழ்கண்ட கட்டளையை இயக்கவும்

     
df -h

df பகிர்வில் இடமிருக்கிறதா என தெரியப்படுத்தும். df மற்றும் இந்த கட்டளையோடு தொடர்புடைய கூடுதல் கட்டளைகளை பற்றி தெரிந்துகொள்ள (அதாவது -h போன்ற துணை கட்டளைகள்), df உதவிப்பக்கங்களை பார்க்க man df என ஷெல் ப்ராம்டில் தட்டச்சு செய்யவும்.

பகிர்வு 100% பயன்படுத்தப்பட்டோ அல்லது 90% அல்லது 95% க்கு மேல் பயன்படுத்தப்பட்டோ இருக்கிறதா என பார்க்கவும்./home/ மற்றும் /tmp/ அடைவுகள் பயனரால் சிலசமயம் முமுமையாக பயன்படுத்தப்பட்டுவிடும். பழைய கோப்புகளை நீக்கி கணினியில் காலி இடங்களை உருவாக்கவும். பிறகு X ஐ பயனர் கணக்கை பயன்படுத்து துவக்க முயலவும்.

B.4.5. உள்நுழைய முயலும் போது சிக்கல்

அமைப்பு முகவர் இல் பயனர் கணக்கை உருவாக்கவில்லையெனில், முதன்மை பயனராக நுழைந்து நீங்கள் ரூட்டுக்காக கொடுத்த கடவுச்சொல்லை பயன்படுத்தவும்

முதன்மை பயனர் கடவுச்சொல் உங்களுக்கு நினைவில்லையெனில், உங்கள் கணினியை linux single என துவக்கவும்.

ஒரு பயனர் பாங்கை அடைந்ததும் # ப்ராம்ட் தெரியும். இங்கே passwd root என தட்டச்சு செய்ய வேண்டும். இதன் மூலம் முதன்மை கடவுச்சொல் நிரந்தரமாக மாற்றப்படும். பின் shutdown -r now என தட்டச்சு செய்து கணினியை மீண்டும் துவக்கவும்.

உங்கள் பயனர்கணக்கு கடவுச்சொல்லை நீங்கள் மறந்திருந்தால் , முதன்மை பயனராக கணினியில் நுழையவு. இவ்வாறு நுழைய su - என்ற கட்டளையை தட்டச்சு செய்து பின் கடவுச்சொல்லை உள்ளிடவும். பிறகு passwd <username> என தட்டச்சு செய்யவும். இது புது பயனருக்கான புதிய கடவுச்சொல்லை கேட்கும். கடவுச்சொல்லை உள்ளிடவும்

வரைகலை உள்நுழை திரை தோன்றவில்லையெனில. உங்கள் வன்பொருள் பொருந்தவில்லையா என்பதை பார்க்கவும். வன்பொருள் பட்டியல் ஐ காண:

http://hardware.redhat.com/hcl/

B.4.6. உங்கள் அச்சியந்திரம் வேலை செய்யவில்லை

உங்களுக்கு அச்சியந்திரத்தை அமைக்க தெரியவில்லை அல்லது அச்சியந்திரம் சரியாக வேலை செய்யவில்லையெனில், அச்சியந்திரம் அமைக்கும் கருவி பயன்பாட்டை பயன்படுத்தவும்.

system-config-printer கட்டளையை கட்டளை வரியில் தட்டச்சு செய்யவும். அச்சியந்திரம் அமைக்கும் கருவி திறக்கும். முதன்மை பயனர் இல்லை எனில் ரூட் கடவுச்சொல் கேட்கும்.

B.4.7. அப்பாச்சி-அடிப்படையிலான httpd service/Sendmail துவங்கும் போது நின்றுவிட்டது.

அப்பாச்சி-அடிப்படையிலான httpd சேவை அல்லது Sendmail துவங்கும் போது நின்றுவிட்டது எனில் /etc/hosts கோப்பில் கீழ்கண்ட வரி இருக்கிறதா என பார்க்கவும்.

127.0.0.1  localhost.localdomain  localhost