| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
Linux 2.6 கர்னல் sysfs கோப்பு அமைப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். sysfs கோப்பு முறைமைproc, devfs, மற்றும் devpty கோப்பு முறைகளின் . sysfs கோப்பு முறை கணினியுடன் இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் அவைகளுடன் இணைக்கப்பட்ட பஸ்கள் ஆகியவைகளை காட்டும்./proc/, இல் உள்ள சாதனம் சார்ந்த தகவல்களை கையாளவதற்காக வடிவமைக்கப்பட்டது. devfs ஏற்கெனவே உள்ள சேவைகளை தரவும் பயன்படும். sysfs ஐ செயல்படுத்தும் போது proc ஐ பயன்படுத்தும் பழைய இயக்கியை பார்க்கலாம். எனினும்sysfs கோப்பு முறையே வருங்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும்.
sysfsகோப்பு முறைமை /sys/ இல் ஏற்றப்பட்டது. மேலும் இதில் சாதனங்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய அடைவுகள் இருக்கும் /sysfs/ இல் உள்ள உப அடைவுகள்:
/devices/ அடைவு
இந்த அடைவில் /css0/ அடைவு உள்ளது. இதன் உப அடைவுகள் லினக்ஸ் கர்னலின் துணை சேனல்களை குறிக்கும். இந்த சேனல்கள் 0.0.nnnn பெயரால் குறிக்கப்படும். இதில் nnnn என்பது 0 மற்றும் ffff க்கு இடைப்பட்ட எண்ணாகும். இந்த துணை சேனல்களில் கோப்புகளின் நிலை மற்றும் உப அடைவுகள் குறிப்பிடுக் சாதனங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். இந்த உப அடைவுகளும் 0.0.nnnn பெயரால் குறிக்கப்படும். இதில் xxxx என்பது 0 மற்றும் ffff க்கு இடைப்பட்ட எண்ணாகும். இந்த /devices/ அடைவில் கோப்புகளின் நிலை பற்றிய தகவல் இருக்கும்.
/bus/ அடைவு
இதில் /ccw/ அடைவு மர்றும் உப அடைவுகள் மற்றும்/ccwgroup/ உப அடைவு இருக்கும். CCW சாதனங்கள் சேனல் கட்டளைகளை பயன்படுத்தும். /ccw/ அடைவில் உள்ள சாதனங்கள் முதன்னை சட்டத்தின் சேனல்களை மட்டுமே பயன்படுத்தும். CCW குழு சாதனங்களும் சேனல் கட்டளைகளுடன் இயங்கும் ஆனால் இவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை சேனல்களை பயன்படுத்தும். உதாரணமாக, 3390-3 DASD சாதனம் ஒரு துணை சேனலை பயன்படுத்தும் போது QDIO வலைப்பின்னல் இணைப்பு OSA ஏற்பியையும் மூன்று உப சேனல்களையும் பயன்படுத்தும். /ccw/ மற்றும் /ccwgroup/ அடைவில் சாதனங்கள் மற்றும் இயக்கிகளுக்கான அடைவுகள் இருக்கும்.
/devices/ அடைவில் சாதனங்களுக்கான குறியீட்டு அடைவுகளுக்கான இணைப்புகள் /sys/devices/css0/ இருக்கும்.
/driversகணினியில் தற்போது உள்ள சாதனங்களுக்கான இயக்கிகள் இந்த அடைவில் இருக்கும். zFCP இயக்கியின் அடைவு இங்கே இருக்கும்./driver/ அடைவில் சாதனங்களுக்கான இயக்கிகள் மற்றும் அவைகளை குறிப்பிடும் இணைப்புகள் இருக்கும்(/sys/devices/css0/ அடைவில் உள்ளவை).
/class/ அடைவு
இந்த அடைவில் ஒத்த சாதனங்களான ttys, SCSI , நாடா இயக்கிகள், வலைப்பின்னல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான இயக்கிகள் இருக்கும்.
/block/ அடைவு
இந்த அடைவில் ஒவ்வொரு பகுதி சாதனுக்தும் தேவையான அடைவுகள் இருக்கும். இது பெரும்பாலும் வட்டு சார்ந்த சாதனங்களாக DASD, loopback சாதனங்கள் மற்றும் மென்பொருள் raid சாதனங்களாகும். பழைய லினக்ஸுக்கும் sysfs ஐ பயன்படுத்தும் லிலினக்ஸுக்கும் உள்ளவேறுபாடு சாதனங்களை sysfs பெயரை பயன்படுத்தி குறிப்பிட வேண்டும். 2.4 கர்னல் பிம்பத்தில் .zFCP இயக்கி சாதன முகவரியாக அனுப்பப்பட்டது.2.6 பிம்பத்தின் கணினி இயக்கி 0.0.1600 ஆக அனுப்பப்பட்டது.