இணைப்பு D. Red Hat Enterprise Linux நிறுவலை பழுது பார்த்தல்

இந்த இணைப்பில் நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் காண்போம்.

D.1. உங்களால் Red Hat Enterprise Linux ஐ துவக்க இயலவில்லை

D.1.1. தங்கள் கணினி சிக்னல் 11 பிழை காண்பிக்கிறதா?

சிக்னல் 11 பிழை segmentation fault என்றும் குறிப்பிடலாம். சிக்னல் 11 பிழை என்பது, ஒதுக்கப்படாத நினைவகத்தை நிரல் அணுகியது என்று பொருள்.

நிறுவலின்போது சிக்னல் 11 பிழை நேர காரணம், உங்கள் கணினியின் bus-ன் நினைவுக்கருவியில் வன்பொருள் பிழையாக இருக்கலாம். இயக்கும்நிரலில் பிரச்சினை, அல்லது கணினியின் வன்பொருள் பிரச்சினை, இவற்றால் நினைவுக்கருவியில் வன்பொருள் பிழை ஏற்படலாம். மற்ற இயங்குதளத்தைப் போல, Red Hat Enterprise Linux அதற்கேற்ற வேலைபளுவை வன்பொருளின்மேல் அளிக்கும். சில வன்பொருள்கள், மற்ற இயங்குதளத்தில் சரியாக இயங்கினாலும் இந்த பளுவை சந்திக்க இயலாது.

Red Hat-லிருந்து புதிய நிறுவல் மேம்பாடுகள் மற்றும் பிம்பங்கள் உங்களிடம் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். புதிய பதிப்புகள் இருக்கின்றதா என்று வலைப்பக்கத்தில் பார்க்கவும். மிகப்புதிதான பிம்பங்களும் செயல்படவில்லையெனில், வன்பொருளில் சிக்கல் இருக்கலாம்.