பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது

இந்த பாடம் Red Hat Enterprise Linux ஐ வரைகலை இடை முகம் வழியாக சுட்டியை பயன்படுத்தி நிறுவது பற்றி விளக்கும்.

2.1. வரைகலை நிறுவல் இடைமுகம்

வரைகலை பயனர் இடைமுகத்தை (GUI) பயன்படுத்துவது பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தால்; உங்கள் சுட்டியை பயன்படுத்தி அடுத்த திரைக்கு செல்லவும், அல்லது உரை புலத்திற்கு செல்லவும்.

விசைப்பலகையை பயன்படுத்தியும் உங்கள் நிறுவலை தொடர முடியும். [Tab] விசை திரைக்குள் நகர உதவும். மேல் மற்றும் கீழ் அம்புக்குறி விசைகள் பட்டியலுக்குள் நகர உதவும் [+] மற்றும் [-] விசைகள் பட்டியலை சேர்க்க விரிக்க உதவும் [Space] மற்றும் [Enter] விசைகள் தேர்வு செய்யவும் தேர்வை நீக்கவும் உதவும். [Alt]-[X] ஐ ஒரு சேர அழுத்தி பட்டனை அல்லது திரையை தேர்வு செய்யலாம். [X] விசையை திரையில் தோன்றும் அடிக்கோடிட்ட உரையாடலால் மாற்றிக் கொள்ள வேண்டும்.