| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
IBM S/390 மற்றும் IBM eServer தளங்களுக்கான நிறுவல் முறை பற்றிய அறிமுகம் உங்களுக்கு எற்கெவே உள்ளது எனக்கொள்கிறோம். இவை பற்றிய கூடுதல் தகவலுக்கு IBM Redbook ஐ இணையத்தில் பார்க்கவும்:
http://www.redbooks.ibm.com/ |
இந்த கையேடு உங்களுக்கு Redbook பற்றிய அறிமுகமும், S/390 அல்லது IBM eServer zSeries கணினிகளில் லாஜிகல்ல் பகிர்வுகள் (LPARs) மற்றும் மெய்நிகர் கணினிகள் பற்றிபுரிதலும் உண்டு எனக்கொள்கிறது.
![]() | குறிப்பு |
|---|---|
IBM பற்றிய தற்போதைய தகவலுக்கு http://www.ibm.com/eserver/zseries/ ஐ பார்க்கவும். |
Red Hat Enterprise Linux ஐ நிறுவும் முன் கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
DASD[1] அல்லது SCSI[2] போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும். (உதாரணம்le, 2 GB சேவகன் நிறுவலுக்கும் 5 GB அனைத்து பணித்தொகுப்புகளை நிறுவவும் தேவைப்படும்).
மெய்நிகர் லினக்ஸ் கணிகளுக்கு குறைந்த பட்சம் 256 MB RAM (512 MB கண்டிப்பாக இருக்க வேண்டும் ) இடம் தேவை.
உங்களுக்கு தேவையான ஸ்வாப் இடத்தின் அளவை கண்டுபிடிக்கவும். z/VM க்கு தேவையான ஸ்வாப் பகிர்வை அமைக்க முடிந்தாலும்(நிச்சயம் தேவை), சில சமயங்களில் தேவைப்படும் RAM அளவை கண்டுபிடிப்பது கடினமான காரியமாகும். இது போன்ற சூழ்நிலையை தேவைக்கேற்ப அணுக வேண்டும்.
Red Hat Enterprise Linux இயங்கு தளத்தை எந்த சூழலில் இயக்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளவும். (LPAR அல்லது விருந்தினர் இயங்குதளம் மெய்நிகர் இயங்குதளத்தில்).
இறுதியாக, பகுதி 3.3 லிருந்து 3.8 வரை ஒரு முறை படித்து பார்க்கவும். IBM Linux for S/390 Redbook இல் பாடம் 5 மற்றும் 6 இல் உள்ள, பல அமைப்பு தகவல்களில் S/390 பற்றியும் அவைகளில் LPAR அல்லது லினக்ஸ் மெய்நிகர் கணினிகள் (z/VM) அமைப்பது பற்றியும் தெரிந்துகொள்ளவும்.
வலைப்பின்னல் அமைப்புகள் முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். Red Hat Enterprise Linux இல் S/390 வலைப்பின்னல் சாதனங்களான CTC (channel-to-channel), IUCV (inter-user communication vehicle), LCS (LAN channel station), மற்றும் QDIO-enabled (Queued Direct I/O) ஆதரவு உண்டு.
நிறுவலுக்காக, குறைந்தது 4 GB இடமாவது (இரண்டு 2 GB DASD, direct access storage device, பகிர்வுகள் அல்லது அவைகளுக்கு சமமான zSeries SCSI LUN கள்) ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். எல்லா DASD வட்டு ஒதுக்கங்களும் நிறுவலுக்கு முன் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நிறுவிய பின் , DASD அல்லது SCSI (zSeries கணினிகளுக்கு மட்டும்) வட்டின் இடங்கள் தேவைக்கேற்ப சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.
| [1] | Direct Access Storage Devices (அல்லது DASDகள்) ஒரு வன்தகட்டில் குறைந்த பட்சம் மூன்று (3) DASD பகிர்வுகளாவது ஒதுக்கப்பட வேண்டும். உதாரணம், dasda இல் உள்ள dasda[123]. |
| [2] | zFCP இயக்கி வழியாக முழுவதும் ஒதுக்கப்பட்ட ஸ்விச், SCSI LUNs கொடுக்கப்பட்டுள்ளது. |