2.4. வன்தகட்டிலிருந்து நிறுவுதல் (DASD)

பகிர்வை பயன்படுத்தி நிறுவும் போது பகிர்வை தேர்வு செய் திரையை பயன்படுத்த வேண்டும். (அதாவது, நீங்கள் வன்தகடை நிறுவல் முறை உரையாடல் பெட்டியில் தேர்வு செய்திருதால் மட்டும்). இந்த உரையாடல் வட்டின் பகிர்வுக்கு பெயர்கொடுக்க அனுமதிப்பதோடு அடைவிலிருந்து Red Hat Enterprise Linux .நிறுவவும் அனுமதிக்கும்.

Red Hat Enterprise Linux உள்ள சாதனத்தின் பெயர் மற்றும் ISO பிம்பத்தை உள்ளிடவும். பிம்பம் உள்ள அடைவு புலம் ஏற்கெனவே இருக்கும்.

ISO பிம்பம் root அடைவில் இருந்தால் அதாவது பகிர்வின் முதல் மட்டத்தில் இருந்தால் / ஐ உள்ளிடவும். ISO பிம்பம் பகிர்வு ஏற்றப்பட்ட உப அடைவில் இருந்தால்குறிப்பிட்ட பிம்பம் இருக்கும் அடைவை குறிப்பிடவும். உதாரணமாக, ISO பிம்பம் ஏற்றப்படும் பகிர்வு /home/ எனினும் பிம்பம் /home/new/ உள்ளது எனில் new. என உள்ளிடவும்

வட்டு பகிர்வை கண்டறிந்த பின் வரவேற்பு உரையாடல் பெட்டி தோன்றும்