2.5. NFS வழியாக நிறுவுதல்

NFS சேவகனிலிருந்து நிறுவினால் மட்டுமே NFS உரையாடல் பொருந்தும் (இதற்கு NFS பிம்பத்தை நிறுவல் முறை யில் தேர்வு செய்திருக்க வேண்டும்).

NFS சேவகனின் டொமைன் பெயர் அல்லது IP முகவரியை உள்ளிடவும். உதாரணம், புரவலன் பெயர் eastcoast டொமைன் பெயர் example.com எனில் eastcoast.example.com என்பதை NFS சேவகன் புலத்தில் உள்ளிவும்.

அடுத்து, ஏற்றுமதி அடைவில் பெயரை உள்ளிடவும். பகுதி 1.3 குறிப்பிட்ட முறையை பின்பற்றி இருந்தால் /location/of/disk/space/இல் RedHat/ அடைவு உள்ள பாதையை உள்ளிடவும்

NFS சேவகன் Red Hat Enterprise Linux இன் நகலை ஏற்றுமதி செய்கிறது எனில் நிறுவல் கிளையில் RedHat/ உள்ள அடைவை உள்ளிடவும். (அடைவின் பெயர் தெரியவில்லை எனில் மேலாளரை கேட்கவும்.)உதாரணமாக, NFS தளத்தில் உள்ள அடைவு /mirrors/redhat/arch/RedHat/எனில் /mirrors/redhat/arch/ என உள்ளிடவும் (இங்கு arch கட்டமைப்பு வகையால் அதாவது i386, ia64, ppc, அல்லது s390 ஆல் மாற்றப்படும்). எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தால் Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் இயங்கிக்கொண்டிருப்பதற்கான செய்தி வரும்.

படம் 2-3. NFS அமைப்பு உரையாடல்

NFS சேவகன் Red Hat Enterprise Linux CD-ROM ISO பிம்பத்தை ஏற்றிக்கொண்டிருந்தால் ISO பிம்பம் உள்ள அடைவை உள்ளிடவும்.

அடுத்து, வரவேற்பு உரையாடல் பெட்டி தோன்றும்.