2.12. பகிர்வுகளை தானாக உருவாக்குதல்

பகிர்வுகளை தானாக உருவாக்குவதன் மூலம் உங்கள் கணினியில் நீக்கப்பட்ட தகவல்களை கட்டுப்படுத்த முடியும். உங்கள் தேர்வுகள்:

படம் 2-8. பகிர்வுகளை தானாக உருவாக்குதல்

சுட்டியை பயன்படுத்தி Red Hat Enterprise Linux ஐ நிறுவ வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வன்தகடுகள் இருந்தால் எந்த வன்தகட்டில் நிறுவ வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். பத்திரப்படுத்த வேண்டிய தகவல்கள் உள்ள பகிர்வுகளை தேர்வு செய்ய வேண்டாம்.

குறிப்புகுறிப்பு
 

நிறுவலை துவங்கும் முன் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை காப்பு எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக உங்கள் கணினியை நீங்கள் இருநிலை துவக்கத்துக்காக மேம்படுத்த விரும்பினால் கணினியில் உள்ள தகவல்களை காப்பு எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் சில சமயம் தவறு ஏதேனும் நேர்ந்து தகவல் இழப்பு நேரிடலாம்.

தானாக பகிர்வுகளை உருவாக்கிய போது ஏற்பட்ட பகிர்வுகளில் தேவையான திருத்தங்கள் செய்ய மீள்பார்வை இடு ஐ தேர்வு செய்யவும்.மீள்பார்வை இடு வை தேர்வு செய்த பின் அடுத்து என்பதை க்ளிக் செய்தால் வட்டுகளில் வரிசை தோன்றும். பகிர்வுகளில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

தேர்வு செய்தல் முடிந்த பின் அடுத்து என்பதை க்ளிக் செய்யவும்