| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
நிறுவல் நிரலில் Red Hat Enterprise Linux எங்கே நிறுவ வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். Red Hat Enterprise Linuxநிறுவப்பட வேண்டிய இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏற்றப்புள்ளிகளை குறிப்பிடுவதன் மூலம் இதை செய்யமுடியும்.
வட்டு ரூயிட் நிறுவலின் போது பயன்படுத்தப்படும் வட்டு பகிர்வு கருவி. வட்டு ரூயிட் தேவையான சூழலுக்கு ஏற்ப பகிர்வுகளை உருவாக்க பயன்படும் சாதனம்.
வட்டு ரூயிட் உங்கள் DASD சாதனம்(கள்) எப்படி இருக்கும் என காட்டும்.
குறிப்பிட்ட புலத்தை தனிப்படுத்த, உங்கள் சுட்டியை பயன்படுத்தி ஒருமுறை க்ளிக் செய்யவும். ஏற்கெனவே உள்ள புலத்தில் திருத்தம் செய்ய இரண்டு முறை க்ளிக் செய்யவும் ஏற்றபுள்ளிஐ ஒதுக்க.
காட்சிக்கு மேல் இயக்கி பெயர் (அதாவது /dev/dasda ), Geom (இதில் வன்தகட்டின் 3 வடிவமைப்புகள் இருக்கும் அதாவது சிலிண்டர்கள்,தலைகள் மற்றும் செக்டார்கள்), மற்றும் நிறுவல் நிரல் கண்டறிந்த வன்தகட்டின் மாதிரி ஆகியவை இருக்கும்.
இந்த பட்டன் கட்டுபடுத்தி வட்டு ரூயிட்செயல்கள், பகிர்வின் பண்புகளை மாற்ற (உதாணமாக கோப்பு வகை ஏற்ற புள்ளி ) மற்றும் RAID சாதனங்களை உருவாக்க பயன்படும். நீங்கள் செய்த மாற்றங்களை ஏற்கவும், வட்டு ரூயிட் லிருந்து வெளியேறவும் இந்த திரையில் உள்ள பட்டன்கள் பயன்படும்.
திருத்து: பகிர்வுகள் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட பகிர்வுகளின் பண்புகளை மாற்ற இந்த பட்டன் உதவும். திருத்து பட்டனை தேர்வு செய்ததும் உரையாடல் பெட்டி தோன்றும்.இதில் உள்ள சில அல்லது அனைத்து புலங்களையும் திருத்தி அமைக்கலாம்.
RAID ஐ உருவாக்கு: RAID ஐ உருவாக்கு பட்டன் உங்கள் வட்டு பகிர்வுகளில் சிக்கலின் போது தற்காப்புக்காக பயன்படும். ஏற்கெனவே அனுபவம் இருந்தால் மட்டுமே RAID ஐதை பயன்படுத்தவும் . பற்றி மேலும் தெரிந்துகொள்ள RAID (Redundant Array of Independent Disks)பாடத்தை பார்க்கவும்.Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு.
RAID சாதனத்தை உருவாக்க மென்பொருள் RAID பகிர்வை உருவாக்கவேண்டும் (அல்லது ஏற்கெனவே உள்ள பகிர்வை பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கும் மேற்பட்ட RAID பகிர்வுகளை உருவக்கிய பின் RAID உருவாக்கு பட்டனை க்ளிக் செய்து அவைகளை RAID பகிர்வில் சேர்க்கவும்.
பகிர்வு வரிசைக்கு மேல் உங்கள் பகிர்வு மற்றும் அவைகள் உருவாக்கம் பற்றிய தகவல் அடங்கிய அடையாள சீட்டு இருக்கும். இந்த அடையாளங்கள் கீழ்கண்டது போல் குறிக்கப்படும்.
சாதனம்: இந்த புலம் பகிர்வு சாதனத்தின் பெயரை குறிப்பிடும்
ஏற்ற புள்ளி/RAID/Volume: ஏற்ற புள்ளி வட்டின் இடங்களை அடைவில் குறிப்பிட பயன்படும்; வட்டின் இடம் பற்றிய தகவல்"mounted" இல் இருக்கும். இந்த புலம் பகிர்வு ஏற்றப்பட்ட இடத்தை பற்றிய தகவலையும் தரும். எற்கெனவே பகிர்வு இருந்தும் அவை அமைக்கப்படவில்லை எனில் ஏற்ற புள்ளிகளை நீங்களாக குறிப்பிடவேண்டும் அதற்கு திருத்து பட்டனை இரண்டு முறை க்ளிக் செய்யவும்.
வகை: இந்த புலம் பகிர்வு கோப்பு அமைப்பின் வகையை குறிப்பிடும்(உதாரணம், ext2 அல்லது ext3 ).
வடிவமைப்பு: இந்த புலம் உருவாக்கப்பட்ட பகிர்வுகளை வடிவமைக்க பயன்படும்
அளவு (MB): இந்த புலம் பகிர்வின் அளவை குறிக்கும் (MB யில்).
துவக்கம்:பகிர்வு துவங்கும் போது உங்கள் வன்தகட்டில் உள்ள உருளைகளை காட்டும்
முடிக்கவும்: இந்த புலம் உங்கள் வன்தகட்டில் பகிர்வு முடியும் இடத்தை குறிக்கும்.
RAID சாதனத்தை மறை/LVM அளவு குழு உறுப்பினர்கள்: RAID சாதனங்கள் அல்லது LVM குழு உறுப்பினர்களை உருவாக்கும்.
சரியாக காரணங்கள் எதுவுமில்லாதவரை, இவ்வாறு பகிர்வை உருவாக்கும் படி பரிந்துரைக்கிறோம்:
ஸ்வாப் பகிர்வு (குறைந்தபட்சம் 256 MB) — மெய்நிகர் நினைவகத்திற்கான ஆதரவை தர பயன்படுகிறது. RAM இல் போதிய இடமில்லாத போது தவகல்கள் இந்த ஸ்வாப் பகிர்வில் எழுதப்படும்.
ஸ்வாப் பகிர்வின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என தெரியவில்லையெனில் உங்கள் கணினியில் RAM அளவைவிட இரு மடங்காக வைக்கவும்.(ஆனால் 2 GB க்குள் இருக்க வேண்டும்).இதன் வகை ஸ்வாப் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
ஸ்வாப் அளவை உருவாக்குவது கீழ்கண்ட காரணங்களால் மாறுபடும்(தேவைக்கேற்ப வரிசைப்படி)
கணினியில் இயங்கிக்கொண்டிருக்கும் பயன்பாடுகள்
கணினியில் உள்ள RAM இன் அளவு
OS இன் பதிப்பு
பொதுவாக ஸ்வாப் அளவு 2x பிசிக்கல் RAM அளவு வரை அல்லது 2GB வரை இருக்கலாம். RAM அளவு 2 GB க்கு மேல் இருந்தால் 1x பிசிக்கல் RAM என கொள்ள வேண்டும் ஆனால் 32 MB யை விட குறைவாக இருக்ககூடாது.
இந்த சமன்பாட்டின் படி 2 GB பிசிகல் RAM உள்ள கணினியில் ஸ்வாப் அளவு 4 GB எனவும் 3GB பிசிகல் RAM உள்ள கணினியின் ஸ்வாப் அளவு 5 GB யாகவும் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஸ்வாப் அளவை அதிகமாக அமைப்பது பிற்காலத்தில் RAM அளவை அதிகரிக்க வசதியாக இருக்கும்.
![]() | சிறு குறிப்பு |
|---|---|
உங்கள் பகிர்வு முறைக்கு 2 GB அளவை விட பெரிய ஸ்வாப் பகிர்வு தேவை எனில் கூடுதல் ஸ்வாப் பகிர்வுகளை உருவாக்கலாம். உதாரணமாக, உங்களிடம் 4 GB RAM இருந்தால், இரண்டு 2 GB ஸ்வாப் பகிர்வுகளை உருவாக்கிக்கிகொள்ளாம். Red Hat Enterprise Linux இல் 32 ஸ்வாப் கோப்புகளுக்கு ஆதரவு உண்டு. |
அதிக அளவு RAM உள்ள கணினிகளில் (32 GB க்கு மேல்) குறைந்த அளவுள்ள ஸ்வாப் பகிர்வுகளை உருவாக்க வேண்டிவரலாம்(1x, அல்லது பிசிக்கல் RAM அளவை விட சிறிய)
/boot/ இல் ஏற்றப்பட்ட /boot/ பகிர்வு (100 MB) — கர்னல் இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த பகிர்வு ( Red Hat Enterprise Linux ஐ துவக்க இது உதவும்) bootstrap இன் போது பயன்படும்.PC BIOS கட்டுப்பாடுகள் காரணமாக இந்த கோப்புகளை சிறிய பகிர்வில் வைத்துக்கொள்வது நல்லது. பெரும்பாலும் 100 MB அளவு போதுமானதாகும்.
root பகிர்வு (500 MB - 5.0 GB) —இங்கே "/" (the root directory) இருக்கும். இந்த அமைப்பில், எல்லா கோப்புகளும் (/boot இல் உள்ள கோப்புகள் தவிர) இந்த பகிர்வில் தான் இருக்கும்.
500 MB பகிர்வு குறைந்தபட்ச நிறுவலை நிகழ்த உதவும் 5.0 GB ரூட் பகிர்வு அனைத்து பணித்தொகுப்புகளை நிறுவ தேவைப்படும்.