2.3. நிறுவல் நிரல் இயங்கிக்கொண்டிருக்கிறது

பாடம் 1 இல் குறிப்பிட்ட முறைகளை பின்பற்றிய பின் LPAR அல்லது VM ஐ துவக்க கணினிகளில், telnet அல்லது ssh கட்டளையை உள்ளிட்டு லினக்ஸ் நிறுவப்பட்ட S/39 கணினியை அணுகவும். ssh வழியாக கணினிக்குள் நுழைவதே சரியான முறையாகும்.

உரை முறை நிறுவல் முறை இயல்பான முறையானாலும், வரைகலை முறையையும் VM மற்றும் LPAR வழியாக NFS நிறுவல் முறையில் பின்பற்றலாம்.

குறிப்புகுறிப்பு
 

வேகம் குறைந்த இணைய இணைப்பு இருந்தால் அல்லது உரை-முறை நிறுவலை விரும்பினால், DISPLAY= மாறியில் parm கோப்பை அமைக்க வேண்டாம். உரை முறை நிறுவல் ,வரைகலை நிறுவல் பேன்றதே எனினும் , பணித்தொகுப்புகளை தேர்வு செய்ய வரைகலை முறையில் கூடுதல் வசதிகள் உண்டு. எனவே வரைகலை நிறுவலை பயன்படுத்துவதே சிறந்தது.

வரைகலை நிறுவலை இயக்க, X விண்டோஸ் உள்ள கணினியை பயன்படுத்தவும் அல்லது VNC கிலையன் நிறுவப்பட்ட கணினியை பயன்படுத்தவும்.பாதுகாப்பு கருதியும், X மற்றும் VNC அமர்வுகளின் முன்னனுப்பலுக்காகவும் X11 முன்னனுப்பல் அல்லது டெல்நெட் வசதி உள்ள SSH கிளையனை பயன்படுத்துவதே நல்லது.X11 முன்னனுப்பலை உங்கள் கணினியில் செயல்படுத்த SSH கிளையன்னுடன் Linux image ஐ இணைக்கவேண்டும். (z/VM இல் லினக்ஸ் விருந்தினர் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும்)

2.3.1. X11 முன்னனுப்பல் பயன்படுத்தி நிறுவுதல்

உதாரணமாக, லினக்ஸ் பிம்பத்துடன் இணைக்க மற்றும் வரைகலை நிறுவலை காட்ட லினக்ஸ் கணினியில் X11 முன்னனுப்பலுடன் SSH ஐ திறந்து, கீழ் கண்ட கட்டளையை உள்ளிட வேண்டும்.

ssh -X linuxvm.example.com

-X தேர்வு கீழ்கண்ட X11 முன்னனுப்பலை செயல்படுத்தும்.

உங்ள் DNS அல்லது புரவலன் பெயர் சரியாக அமைக்கப்படவில்லை எனில் வரைகலை நிறுவல் இடைமுகம் துவங்காது, அல்லது லினக்ஸ் பிம்பம் உங்கள் திரையில் காட்சியை அனுமதிக்காது. இதற்கு சரியான DISPLAY= மாறியை அமைக்க வேண்டும். DISPLAY=workstationname:0.0 வின் அளவுருவை கோப்பில் workstationname பெயரை புரவலன் பெயரால் மாற்றி லினக்ஸ் பிம்பம் இணைய வழி செய்யவும். xhost +linuxvm கட்டளையை workstation இல் பயன்படுத்தி லினக்ஸ் பிம்பம் workstation உடன் இணைய செய்யவும்.

NFS வழியாக வரைகலை இடைமுகம் துவங்க வில்லையெனில் DISPLAY= அமைப்பை சோதித்து parm மாறிகளை அமைக்கவும். VM நிறுவல் முடிந்ததும், புதிய parm களை கோப்பில் அமைக்க மீண்டும் இயக்கவும். மேலும்,X சேவகன் அமைத்த X11 முன்னனுப்பல் காட்சி சரியாக நிகழ்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இறுதியாக, நீங்கள் தேர்வு செய்த NFS நிறுவல் முறை சரியான முறையா என்றும் அதில் வரைகலை நிறுவல் ,முறைக்கு ஆதரவு உள்ளதா எனவும் பார்த்துக்கொள்ளவும்.

2.3.2. VNC ஐ பயன்படுத்தி நிறுவுதல்

VNC ஐ பயன்படுத்தினால், SSH முனையத்தில் நீங்கள் VNC கிளையனை பயன்படுத்துவது பற்றியும் VNC காட்சி குறிப்புகள் பற்றிய தகவல்களை கேட்கும். SSH முனையத்தில் தேவையான தகவலை உள்ளிட்டு லினக்ஸ் பிம்பத்துடன் இணைந்து நிறுவலை துவக்கவும்.

loader இல் லினக்ஸ் பிம்பத்தை ஏற்றிய பின் நிறுவல் துவங்கப்படும்.

loader துவங்கியதும், நிறுவல் முறையை தேர்வு செய்யும் சாளரங்கள் தோன்றும்.