| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவங்கம் | அடுத்து |
Red Hat Enterprise Linux ஐ LPAR இல் நிறுவ கீழ்கண்ட படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Hardware Master Console (HMC) அல்லது Support Element Workplace (SEW) இல் சரியான அனுமதியுடன் நுழைந்து புதிய LPAR க்கான OS ஐ நிறுவவும். SYSPROG பயனராக இருக்க வேண்டும்.
Images ஐ தேர்வு செய்து, பின் நிறுவ விரும்பும் LPAR ஐ தேர்வு செய்யவும். CPC Recovery மெனுவுக்குள் நகர அம்புக்குறியை பயன்படுத்தவும்.
Load from CD-ROM or Server இல் இரண்டு முறை க்ளிக் செய்யவும்.
Local CD-ROM இன் மேல் இரண்டு முறை க்ளிக் செய்து தொடர்க என்பதை அழுத்தவும்.
இதை தொடர்ந்து வரும் உரையாடல் பெட்டியில் generic.ins ஐ தேர்வு செய்து தொடர்க என்பதை க்ளிக் செய்யவும்.
தொடர பகுதி 1.8 ஐ தவிர்க்கவும்.