F.6. வலைப்பின்னல் சாதனங்களை சேர்க்கிறது

Red Hat Enterprise Linux க்கான வலைப்பின்னல் சாதனங்களை சேர்க்கும் முறை மாற்றப்பட்டுள்ளது. 2.4 கர்னலிலிருந்து 2.6 கர்னலுக்கு மாறியதே இதற்கு காரணம்:

பகுதி F.6.1 தற்போதுள்ள Red Hat Enterprise Linux இல் qeth தகவல்களை எப்படி சேர்ப்பது என்பதை பற்றி விளக்கும். பகுதி F.6.2 zSeries வலைப்பின்னலை மிக விரைவில் அமைக்க பயன்படும்.

F.6.1. qeth சாதனத்தை சேர்க்கிறது

முதலில், qeth சாதன இயக்கியில் பகுதி ஏற்றப்பட்டதா என்பதை தெரிந்துகொள்ளவும்.

# lsmod | grep qeth
qeth                  135240  0
qdio                   45360  2 qeth
ipv6                  303984  13 qeth
ccwgroup               15104  1 qeth

lsmod கட்டளையில் விளைவு பகுதிகள் ஏற்றப்படவில்லை என்பதை காட்டும், modprobe இயக்கி பகுதிகளை ஏற்றவும்:

# modprobe qeth

qeth குழு சாதனத்தை உருவாக்கவும்.

# echo <read_device_bus_id>,<write_device_bus_id>,<data_device_bus_id>
> /sys/bus/ccwgroup/drivers/qeth/group

கட்டளை மிக நீளமாக இருப்பதால், இரண்டாக உடைக்கப்பட்டது.

கீழ்கண்ட உதாரணத்தில்; read_device_bus_id0.0.0600, write_device_bus_id 0.0.0601, மற்றும்data_device_bus_id 0.0.0602. சாதணம் a z/VM virtual NIC மற்றும் IP முகவரி இந்த இடைமுகத்திற்கு அமைக்கப்பட வேண்டும் 192.168.70.69.

# echo 0.0.0600,0.0.0601,0.0.0602 > /sys/bus/ccwgroup/drivers/qeth/group

அடுத்து qeth குழு சாதனம் சரியாக உருவாக்கப்பட்டதா என்பதை சோதிக்கவும்:

# ls /sys/bus/ccwgroup/drivers/qeth
0.0.0600  0.0.09a0  group  notifier_register

port பெயரை விருப்பட்டால் சேர்க்கலாம். முதலில், port பெயர் தேவையா என்பதை பார்க்கவும்:

# cat /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/portname
no portname required

portபெயரை குறிப்பிடத்தேவையில்லை என்பதை உணர்த்துகிறது.

port பெயரை சேர்க்க , சாதனங்கள் இயக்கதில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கீழ்கண்ட கட்டளையை இயக்கவும்:

குறிப்புகுறிப்பு
 

port பெயரை சேர்க்கும் போது சாதனம்(கள்) இணையத்தில் இருக்ககூடாது.

# echo <portname> > /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/portname

அடுத்து, சாதனத்தை இணையத்துடன் இணைக்கவும்:

# echo 1 /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/online

சாதனத்தை நிலையை சரிபார்த்துக்கொள்ளவும்:

# cat /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/online
1

தருமதிப்பு "1" எனில் சாதனம் இணையத்தில் உள்ளது எனவும், '0' எனில் இணையத்தில் இல்லை எனவும் பொருள்.

சாதனத்திற்கு கொடுக்கப்பட்ட இடைமுக பெயரை சோதித்து தெரிந்துகொள்ளவும்:

# cat /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/if_name
eth1

if_name இன் மதிப்பை மாற்ற கீழ்கண்ட கட்டளையை இயக்கவும்:

# echo <new_if_name> > /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/if_name

நீங்கள் கணினியை அமைத்த விதத்தை பொருத்து கூடுதல் அளவுருக்கள் மற்றும் வசதிகளை அமைக்கமுடியும்.

இந்த வசதிகள் எவ்வாறு வேலை செய்யும் என்பதை பொருத்து, பார்க்கhttp://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (zSeries மற்றும் S/390 சாதன இயக்கிகள், சிறப்புபண்புகள், மற்றும் கட்டளைகள்).

இப்போது உங்கள் புதிய இடைமுகத்துக்கான அமைப்புக்கோப்பை உருவாக்கலாம். வலைப்பின்னல் இடைமுக அமைப்பு கோப்பு /etc/sysconfig/network-scripts/ இல் உள்ளது.

வலைப்பின்னல் அமைப்புக்கோப்பு fcfg-<device> பெயர் முறையை பயன்படுத்துகிறது. இங்கே if_name கோப்பில் உள்ள qeth குழு சாதனங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மதிப்புகள் இருக்கும். இந்த உதாரணத்தில் இது eth1.

ஏற்கெனவே உள்ள அமைப்பு கோப்பில் வேறு சாதனத்திற்கான இதே கோப்பு ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தால், அவைகளை புதிய பெயரில் நகலெடுத்துகொள்ளவும்.

# cd /etc/sysconfig/network-scripts
# cp ifcfg-eth0 ifcfg-eth1

இதே போன்ற சாதனம் உங்கள் கணினியில் இல்லையெனில் ifcfg-eth0 வார்புருவை பயன்படுத்தவும்.

/etc/sysconfig/network-scripts/ifcfg-eth0
# IBM QETH
DEVICE=eth0
BOOTPROTO=static
HWADDR=00:06:29:FB:5F:F1
IPADDR=9.12.20.136
NETMASK=255.255.255.0
ONBOOT=yes
NETTYPE=qeth
SUBCHANNELS=0.0.09a0,0.0.09a1,0.0.09a2
TYPE=Ethernet

புதிய ifcfg-eth1 கோப்பை திருத்து.

இப்போது HWADDR வரியை நீக்கு.

DEVICE விளகத்தை மாற்றி உங்கள் if_name கோப்பில் ccwgroup மாற்றங்கள் விளைவுகளை எற்படுத்துமாறு செய்யவும்.

IPADDR விளக்கம் உங்கள் இடைமுகத்தின் புது IP முகவரியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு திருத்தவும்.

NETMASK விளக்கம் தேவைகேற்ப மாற்றப்பட வேண்டும்.

கணினி துவங்கும் போது இடைமுகம் செயல்படுத்தப்பட வேண்டுமெனில் , உங்கள் ONBOOT அளவுரு yes என அமைக்கப்பட்டதா என பார்க்கவும்.

உங்கள் SUBCHANNELS விளக்கம் வன்பொருள் முகவரியுடன் qeth சாதனத்தில் பொருந்துகிறதா என பார்க்கவும்.

/etc/sysconfig/network-scripts/ifcfg-eth1
# IBM QETH
DEVICE=eth1
BOOTPROTO=static
IPADDR=192.168.70.87
NETMASK=255.255.255.0
ONBOOT=yes
NETTYPE=qeth
SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602
TYPE=Ethernet

qeth சாதனத்திற்கு /etc/modprobe.conf மாற்று தகவல் தேவை. இந்த கோப்பை திருத்தி மாற்று தகவலை சேர்க்கவும்.

/etc/modprobe.conf
alias eth0 qeth
alias eth1 qeth
options dasd_mod dasd=0.0.0100,0.0.4b19

இனி புதிய இடைமுகத்தை துவக்கலாம்:

# ifup eth1

இடைமுகத்தின் நிலையை சோதிக்கவும்:

# ifconfig eth1
eth1      Link encap:Ethernet  HWaddr 02:00:00:00:00:01
inet addr:192.168.70.87  Bcast:192.168.70.255  Mask:255.255.255.0
inet6 addr: fe80::ff:fe00:1/64 Scope:Link
UP BROADCAST RUNNING NOARP MULTICAST  MTU:1492  Metric:1
RX packets:23 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:3 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:644 (644.0 b)  TX bytes:264 (264.0 b)

HWaddr புலத்தின் முதல் வரியில் ifconfig கட்டளையின் விளைவை பார்க்கவும். இதற்கு பின் ifcfg-eth1 கோப்பின் மதிப்பு சேர்க்கப்படும். கீழ்கண்ட வரிகளை சேர்க்கவும்:

HWADDR=02:00:00:00:00:01

இப்போது ifcfg-eth1 இவ்வாறு இருக்கும்:

# IBM QETH
DEVICE=eth1
HWADDR=02:00:00:00:00:01
BOOTPROTO=static
IPADDR=192.168.70.69
NETMASK=255.255.255.0
ONBOOT=yes
NETTYPE=qeth
SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602
TYPE=Ethernet

புதிய இடைமுகத்திற்கான பாதையை சோதிக்கவும்:

# route
Kernel IP routing table
Destination     Gateway         Genmask        Flags Metric Ref  Use Iface
192.168.70.0    *               255.255.255.0  U     0      0      0 eth1
9.12.20.0       *               255.255.255.0  U     0      0      0 eth0
169.254.0.0     *               255.255.0.0    U     0      0      0 eth1
default         pdlrouter-if5.p 0.0.0.0        UG    0      0      0 eth0

உங்கள் மாற்றங்களை சோதிக்க ping கட்டளையை பயன்படுத்தி நுழைவாயில் முகவரியை அழைக்கவும்:

# ping -c 1 192.168.70.8
PING 192.168.70.8 (192.168.70.8) 56(84) bytes of data.
64 bytes from 192.168.70.8: icmp_seq=0 ttl=63 time=8.07 ms

இயல்பான பாதை தகவல் மாற்றப்பட்டால் /etc/sysconfig/network யில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

F.6.2. வலைப்பின்னல் சாதனங்களை சேர்க்க சுலபமான கையேடு

zSeries கணினிகளில் வலைப்பின்னல் இடைமுகத்தை சேர்க்க பல வழிகள் உள்ளன.

கீழ்கண்ட தகவல்கள் zSeries வலைப்பின்னல் இயக்கியின் பணிகள் பற்றி விளக்கும்.

F.6.2.1. LCS சாதன இயக்கிகளுடன் பணியாற்றல்

LAN சேனல் நிலையம் (LCS) சாதன இயக்கி OSA-2 Ethernet/Token Ring, OSA-Express Fast Ethernet இல் non-QDIO பாங்கு, மற்றும் OSA-Express High Speed Token Ring இல் non-QDIO mode ஆதரவை தரும். மற்றும் LCS இயக்கி non-QDIO mode இல்(1000Base-T ஐயும் சேர்த்து) கிகாபைட் ஈத்தர்நெட் ஆதரவை தரும்.

சேர்க்கபப்ட்ட இடைமுகத்தை பொருத்து, LCS இயக்கி இரண்டு இடைமுகத்தில் ஒன்றை தேர்வு செய்யும் eth<n> OSA-Express Fast Ethernet and Gigabit Ethernet tr க்கானது <n> Token Ring, க்கானது இங்கே <n> முதல் சாதன வகையெனில் 0, 1 இரண்டாவது... என குறிப்பிடப்படும்.

  • சாதன இயக்கியை ஏற்றுகிறது:

    # modprobe lcs
  • குழு இயக்கியை உருவாக்கு:

    # echo <read_device_bus_id>,<write_device_bus_id> 
    > /sys/bus/ccwgroup/drivers/lcs/group

    கட்டளை மிக நீளமாக இருப்பதால், இரண்டாக உடைக்கப்பட்டது.

  • சாதனத்தை அமை.

    OSA அட்டை ஒரு CHPID க்கு16 portகளை தரும். இயல்பாக LCS குழு சாதனங்கள் port 0 வை பயன்படுத்தும். வேறு port களை பயன்படுத்த இது போன்ற கட்டளையை உள்ளிட வேண்டும்:

    # echo <portno> > /sys/bus/ccwgroup/drivers/lcs/<device_bus_id>/portno

    LCS இயக்கியை அமைப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு கீழ்கண்டவைகளை பார்க்வும்:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • சாதனத்தை இணையத்தில் அமைக்கவும்:

    # echo 1 /sys/bus/ccwgroup/drivers/lcs/<read_device_bus_id>/online
  • மாற்று பெயரை குறிப்பிடவும்.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தின் வகையை பொருத்து , /etc/modprobe.conf கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்க்கவும்:

    eth<n> alias lcs
    tr<n> alias lcs
  • அமைப்பு நிரலை உருவாக்கு.

    /etc/sysconfig/network-scripts/ கோப்பை உருவாக்கி இவ்வாறு பெயரிடவும்:

    ifcfg-eth<n>
    ifcfg-tr<n>

    கோப்பு இவ்வாறு இருக்க வேண்டும்:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-eth0
    # IBM LCS
    DEVICE=eth0
    BOOTPROTO=static
    HWADDR=00:06:29:FB:5F:F1
    IPADDR=9.12.20.136
    NETMASK=255.255.255.0
    ONBOOT=yes
    NETTYPE=lcs
    SUBCHANNELS=0.0.09a0,0.0.09a1
    PORTNAME=0
    TYPE=Ethernet

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, DEVICE அளவுருக்கள் கீழ்கண்டவைகளில் ஒன்று போல் இருக்க வேண்டும்:

    DEVICE=eth<n>
    DEVICE=tr<n>
  • சாதனத்தை செயல்படுத்து.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, ifup கட்டளையை உள்ளிடவும்:

    # ifup eth<n>
    # ifup tr<n>

F.6.2.2. QETH சாதன இயக்கி இதனுடன் வேலை செய்யும்

QETH வலைப்பின்னல் சாதன இயக்கி Series HiperSockets, OSA-Express Fast Ethernet, Gigabit Ethernet (including 1000Base-T), High Speed Token Ring, மற்றும்ATM வசதியுடன் கூடிய (running Ethernet LAN emulation) இல்QDIO பாங்கிற்கு ஆதரவு தரும்.

சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, QETH சாதனம் கீழ்கண்ட மூன்று இடைமுக பெயர்களில் ஒன்றை பயன்படுத்தும்:

  • hsi<n> க்கான HiperSocket சாதனம்

  • eth<n> for OSA-Express Fast Ethernet and Gigabit Ethernet

  • tr<n> க்கானToken Ring

மதிப்பு <n> சாதனத்தை குறிக்கும் இயல் எண். <n> முதல் சாதனம் 0, இரண்டாவது சாதனம் 1 , 2 ... என வரிசையாக குறிப்பிடப்படும்.

  • சாதன இயக்கியை ஏற்றுகிறது:

    # modprobe qeth
  • குழு இயக்கியை உருவாக்கு:

    # echo <read_device_bus_id>,<write_device_bus_id>,<data_device_bus_id>
    > /sys/bus/ccwgroup/drivers/qeth/group

    கட்டளை மிக நீளமாக இருப்பதால், இரண்டாக உடைக்கப்பட்டது.

  • சாதனத்தை அமை.

    QETH இயக்கிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு கீழ்கண்ட வலைமனைகளை பார்க்கவும்:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • சாதனத்தை இணையத்தில் அமைக்கவும்:

    # echo 1 /sys/bus/ccwgroup/drivers/qeth/<read_device_bus_id>/nline
  • மாற்று பெயரை குறிப்பிடவும்.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, /etc/modprobe.conf கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்க்கவும்:

    hsi<n> alias qeth
    eth<n> alias qeth
    tr<n> alias qeth
  • அமைப்பு நிரலை உருவாக்கு.

    /etc/sysconfig/network-scripts/ கோப்பை உருவாக்கி இவ்வாறு பெயரிடவும்:

    ifcfg-hsi<n> 
    ifcfg-eth<n>
    ifcfg-tr<n>

    கோப்பு இதுபோல இருக்க வேண்டும்:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-eth0
    # IBM QETH
    DEVICE=eth0
    BOOTPROTO=static
    HWADDR=00:06:29:FB:5F:F1
    IPADDR=9.12.20.136
    NETMASK=255.255.255.0
    ONBOOT=yes
    NETTYPE=qeth
    SUBCHANNELS=0.0.09a0,0.0.09a1,0.0.09a2
    TYPE=Ethernet

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, DEVICE அளவுருக்கள் இது போல இருக்க வேண்டும்:

    DEVICE=hsi<n>
    DEVICE=eth<n>
    DEVICE=tr<n>
  • சாதனத்தை செயல்படுத்து.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, ifup கட்டளையை உள்ளிடவும்:

    # ifup hsi<n>
    # ifup eth<n>
    # ifup tr<n>

F.6.2.3. CTC சாதன இயக்கிகளுக்காக வேலை செய்கிறது

Channel-to-Channel (CTC) இணைப்பு இரண்டு mainframes கணினிகளுக்கு இடையே உள்ள அதிவேக இணைப்பாகும். CTC சாதனங்கள் இரண்டு லினக்ஸ் zSeries மற்றும் S/390 கணினிகள் மற்றும் mainframe இயங்குதளங்களான z/OS, OS/390, z/VM, அல்லது z/VSE க்கு இடையில் point-to-point TCP/IP அல்லது tty இணைப்பை உருவாக்கப்பயன்படும்

CTC இயக்கியில் அடிப்படை இடைமுக பெயர் இவ்வாறு குறிப்பிடப்படும்:

ctc<n>

மதிப்பு <n> சாதனத்தை குறிக்கும் இயல் எண். <n> முதல் சாதனம் 0, இரண்டாவது சாதனம் 1 , 2 ... என வரிசையாக குறிப்பிடப்படும்.

  • சாதன இயக்கியை ஏற்றுகிறது:

    # modprobe ctc
  • குழு இயக்கியை உருவாக்கு:

    # echo <read_device_bus_id>,<write_device_bus_id> 
    > /sys/bus/ccwgroup/drivers/ctc/group

    கட்டளை மிக நீளமாக இருப்பதால், இரண்டாக உடைக்கப்பட்டது.

  • சாதனத்தை அமை.

    விதிமுறையை அமை:

    # echo <protocol> /sys/bus/ccwgroup/drivers/ctc/<device_bus_id>/protocol

    இங்கே <protocol> என்பது 0, 1, 2, அல்லது 3.

    0 — OS/390, மற்றும் z/OS, இவைகளுக்கான பொருத்தத்தை தர பயன்படும் உதாரணமாக, VM TCP சேவைகணினி.இது இயல்பாக அமைக்கப்படும்.

    1 — லினக்ஸ் பீர்களுக்கு இடையேயான பணித்தொகுப்புகளை மேம்படுத்த இந்த விதிமுறை பயன்படும்.

    2 — CTC-அடிப்படையிலான tty இணைப்புகலை தர இந்த விதிமுறை பயன்படும்.

    3 — OS/390 அல்லது z/OS பீர்களுக்கு பொருத்தத்தை எற்படுத்த இந்த விதிமுறை பயன்படும்.

    CTC இயக்கிகள் அமைப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு கீழ்கண்ட வலைமனைகளை பார்க்கவும்:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • சாதனத்தை இணையத்தில் அமைக்கவும்:

    # cho 1 /sys/bus/ccwgroup/drivers/lcs/<read_device_bus_id>/online
  • மாற்று பெயரை குறிப்பிடவும்.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருத்து , /etc/modprobe.conf கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்க்கவும்:

    ctc<n> alias ctc
  • அமைப்பு நிரலை உருவாக்கு.

    /etc/sysconfig/network-scripts/ இது போன்ற பெயர் கொண்ட கோபை உருவாக்கவும்:

    ifcfg-ctc<n>

    கோப்பு இது போல இருக்க வேண்டும்:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-ctc0
    # IBM CTC
    DEVICE=ctc0
    BOOTPROTO=static
    IPADDR=192.168.70.136
    GATEWAY=172.16.70.136
    NETMASK=255.255.255.255
    ONBOOT=yes
    SUBCHANNELS=0.0.1b00,0.0.1b01
    NETTYPE=ctc
    CTCPROT=0
    TYPE=CTC
  • சாதனத்தை செயல்படுத்து.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருந்து, ifup கட்டளையை உள்ளிடவும்:

    # ifup ctc<n>

F.6.2.4. IUCV சாதன இயக்கிகளுடன் பணியாற்றல்

Inter-User Communication Vehicle (IUCV) என்பது VM தொலைதொடர்பு வசதி இது VM விருந்தினரை மற்ற VM விருந்தினருடன் பேச வைப்பதோடு சில கட்டுப்பாடு நிரல்களைக்கொண்டு தன்னுடனேயே பேசிக்கொள்ளவும் முடியும்.zSeries மற்றும் S/390 கணினிகளில் IUCV சாதன இயக்கி ஒரு VM பயனர் ID யிலிருந்து மற்றதை தொடர்புகொள்ள வலைப்பின்னல் சாதனத்துடன் கூடிய IUCV ஐ பயன்படுத்தும். இதில் கணினியின் TCP/IP சேவகள் இருக்கும்.

IUCV இயக்கியின் அடிப்படை இடைமுக பெயர் இவ்வாறு இருக்கும்:

iucv<n>

மதிப்பு <n> சாதனத்தை குறிக்கும் இயல் எண். <n> முதல் சாதனம் 0, இரண்டாவது சாதனம் 1 , 2 ... என வரிசையாக குறிப்பிடப்படும்.

  • சாதன இயக்கியை ஏற்றுகிறது:

    # modprobe netiucv
  • IUCV சாதனத்தை உருவாக்கு:

    # echo <peer_id> > /sys/bus/iucv/drivers/netiucv/connection

    மதிப்பு <peer_id> நீங்கள் இணைக்க விரும்பும் VM விருந்தினரின், விருந்தினர் எண்ணாகும். IUCV சாதன எண் ID பெரிய ய எழுத்துக்களில்குறிப்பிடப்படும். பொதுவாக TCPIP பயன்படுத்தப்படும்.

    இது போன்ற sysfs அமைப்பை உருவாக்கும்:

    cat /sys/bus/iucv/drivers/netiucv/netiucv<n>

    மதிப்பு <n> சாதனத்தை குறிக்கும் இயல் எண். <n> முதல் சாதனம் 0, இரண்டாவது சாதனம் 1 , 2 ... என வரிசையாக குறிப்பிடப்படும்.

  • சாதனத்தை அமை.

    தேவையான இடைமுக அளவை அமைக்கவும்:

    # echo <value> > /sys/bus/iucv/drivers/netiucv/netiucv<n>/buffer

    <value> என்பது நீங்கள் அமைக்க விரும்பும் பைட்களின் எண்ணிக்கை. இந்த வரம்புக்கு மேல் மதிப்பளிக்க விரும்பினால், இந்த கட்டளையை தவிர்க வேண்டும்.

    அதிகபட்ச இடையக அளவின் வரம்பு MTU அமைப்புகளை பொருத்தது. இதன் வரம்பு <minimum MTU + header size> லிருந்து <maximum MTU + header size> ஆக இருக்கும். தலைப்பு இடம் பொதுவாக 4 பைட்கள் இருக்கும். இயல்பான அதிகபட்ச இடையக அளவும் 32768 பைட்கள் (32 KB).

    IUCV இயக்கியை அமைப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு கீழ்கண்ட இணைப்புகளை பார்க்கவும்:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • மாற்று பெயரை குறிப்பிடவும்.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருத்து , /etc/modprobe.conf கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்க்கவும்:

    iucv<n> alias netiucv
  • அமைப்பு நிரலை உருவாக்கு.

    /etc/sysconfig/network-scripts/ இது போன்ற பெயர் கொண்ட கோபை உருவாக்கவும்:

    ifcfg-iucv<n>

    கோப்பு இதுபோல இருக்க வேண்டும்:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-iucv0
    # IBM IUCV
    DEVICE=iucv0
    BOOTPROTO=static
    IPADDR=192.168.70.136
    GATEWAY=172.16.70.136
    NETMASK=255.255.255.255
    ONBOOT=yes
    NETTYPE=iucv
    PEERID=TCPIP
    TYPE=IUCV
  • சாதனத்தை செயல்படுத்து.

    சேர்க்கப்பட்ட இடைமுகத்தை பொருத்து, ifup கட்டளை இவ்வாறு இருக்கும்:

    # ifup iucv<n>