F.7. கர்னல்-தொடர்பான தகவல்கள்

Red Hat Enterprise Linux லினக்ஸ் கர்னல் interrupt களை கையாள்வது மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இயல்பாக, வன்பொருள் நேரம்காட்டி இயல்பான வேக interrupt களை குறிப்பிட்ட விகிதத்தில் கையாளும்(நொடிக்கு 100 முறை ). இந்த interrupt களை குறிப்பிட்ட பணியை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் செய்ய கர்னல் பயன்படுத்திக்கொள்ளும். அதாவது, கணக்கெடுத்தல், தூய்மைப்படுத்தல், மற்றுக் கணினி இயக்க நேரத்தை கையாளல் ஆகியவை.

ஒரே ஒரு கர்னல் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் கணினியில் நேரம் சார்ந்த முறை பயன்படுத்தப்படும். பல கர்னல்கள் இயக்கிக்கொண்டிருக்கும் போது இவைகள் கூடுதல் வேலைபலுவாகிவிடும். (உதாரணம் z/VM(R) guests). இது போன்ற சூழலில் ஒரு நொடியில் பல interrupt களை உருவாக்கி சுமையை குறைக்கலாம்.

இதனால், Red Hat Enterprise Linux இல் இப்போது குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இயங்கும் timer interrupt கள் சேர்க்கப்பட்டுள்ளது. /proc/ கோப்பின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த interrupt களை செயல்நீக்க, கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்:

echo "0" > /proc/sys/kernel/hz_timer

timer interrupt களை கால இடைவெளிக்குள் செயல்படுத்த, கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்:

echo "1" > /proc/sys/kernel/hz_timer

இயல்பாக, timer interrupt கள் செயல்பாட்டில் இருக்கும்.

கால இடைவெளிக்குள் செயல்படும் timer interrupt கள் துவக்க நேரத்தின் போதும் அமைக்கலாம், இதை செய்ய, கீழ்கண்ட கட்டளையை /etc/sysctl.conf உள்ளிட்டு timer interrupt களை செயல்நீக்கவும்:

kernel.hz_timer = 0

குறிப்புகுறிப்பு
 

timer interrupt களை செயல்நீக்குவதால் கணினி கணக்கெடுத்தல் விதி மீரப்படும். timer interrupt செயலில் இருந்தும் கணினி கணக்கெடுத்தல் சரியாக வேலை செய்யவில்லை எனில் http://bugzilla.redhat.com/bugzilla/ க்கு பிழை அறிக்கை அனுப்பவும். (தவறாக பணியாற்றும் கருவிகளுக்கு), அல்லது விற்பனையாளரை அனுகவும் (3 ஆம் நபர் கருவி எனில்).