1.3. வலைப்பின்னல் நிறுவலுக்கு தயார்படுத்தல்

Red Hat Enterprise Linux க்கான நிறுவல் மீடியா வலைப்பின்னலிலோ (NFS, FTP, HTTP வழியாக) அல்லது தனி சேமிப்பகத்திலோ இருக்க வேண்டும். NFS, FTP, அல்லது HTTP நிறுவலை தொடர விரும்பினால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

வலைப்பின்னல் வழியாக நிறுவ NFS, FTP, அல்லது HTTP சேவகன் தனிகணினியாக இருக்க வேண்டும். அதில் RedHat/ அடைவு இருக்க வேண்டும். RedHat/base/ மற்றும் RedHat/RPMS/ அடைவில் நிறுவலுக்காக CD-ROM களின் கோப்புகள் அனைத்தும் இருக்க வேண்டும்.

குறிப்புகுறிப்பு
 

குறிப்பிட்டுள்ள அடைவு /location/of/disk/space/ ஐ குறிக்கும். இதன் பொருள் இது ஒரு அடைவு. இதில் RedHat/ டிஸ்டிரிபூஷன் அடைவு இருக்காது.உதாரணமாக உங்களிடம் நிறுவல் கோப்பு /export/rhel/ ஸ்டேஜிங் சேவகனில் இருந்தால் /location/of/disk/space//export/rhel/ ஆக இருக்கும்.

CD-ROM இல் உள்ள நிறுவல் கோப்புகள் அனைத்தையும் நிறுவல் ஸ்டேஜிங் சேவகனில் உள்ள RedHat/ அடைவிற்கு நகர்த்தவும். அதன் பின் பின்வருமாறு செய்யவும்.

1.3.1. NFS நிறுவலுக்கு ISO பிம்பத்தை பயன்படுத்துகிறது

NFS நிறுவலுக்கு முழு நிறுவல் கிளையை நகலெடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ISO (அல்லது CD-ROM) பிம்பங்களை பயன்படுத்தலாம். தேவையான ISO பிம்பங்களை அடைவிற்கு நகர்த்தியதும் (the binary Red Hat Enterprise Linux CD-ROMs), NFS வழியாக நிறுவு என்பதை தேர்வு செய்யவும். பிறகு நிறுவல் நிரலுக்கான அடைவை குறிப்பிட்டு நிறுவலை தொடரவும்.

NFS நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க ISO பிம்பங்களை சோதிப்பது நல்லது. ISO பிம்பத்தை சோதிக்க md5sum நிரலை பயன்படுத்தவும்.(md5sum நிரல் பல இயங்குதளங்களில் உள்ளது).md5sum ISO பிம்பம் இருக்கும் லினக்ஸ் கணினியில் இருக்கும்.

updates.img கோப்பு நிறுவல் நிரலுள்ள அடைவில் இருந்தால் , மேம்படுத்தலுக்கு உதவும். anaconda RPM பணித்தொகுப்பிலுள்ள install-methods.txt கோப்பை பார்த்து Red Hat Enterprise Linux ஐ நிறுவும் மற்றும் மேம்படுத்தும் முறைகளை தெரிந்துகொள்ளவும்.

குறிப்புகுறிப்பு
 

நீங்கள் ஒரு குறிப்பிட்ட வெளியீடு அல்லது Red Hat Enterprise Linux க்கான ISO பிம்பங்களை மட்டுமே ஒரு அடைவில் வைக்துக்கொள்ள முடியும்.