| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
இந்த இணைப்பில் நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் காண்போம்.
நிறுவல் முடித்துவிட்டு, கணினியை சரியாக துவக்க முடியவில்லை எனில், மீண்டும் நிறுவலை செயல்படுத்தி பகிர்வுகளை மாற்றி உருவாக்கவேண்டியிருக்கும்.
RAID அட்டைகளிலிருந்து துவக்குவதை சில BIOS-கள் ஆதரிப்பதில்லை. ஒரு நிறுவல் முடிந்தபின், உங்களுக்கு தெரிவதெல்லாம் துவக்க ஏற்றி ப்ராம்ப்ட் (உதாரணத்திற்கு, GRUB:) காண்பிக்கும் ஒரு உரை-சார்ந்த திரை, மற்றும் ஒரு மிளிரும் கர்சர், இப்படி இருந்தால் கணினியை மறுபங்கீடு செய்யவேண்டும்.
தானியங்கி அல்லது கைமுறை பங்கீடு, இதில் நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும், உங்கள் /boot பகிர்வை RAID வரிசைக்கு வெளியே (உதாரணத்துக்கு, ஒரு தனி வன்தகடில்) நிறுவவேண்டும். சிக்கல் கொண்ட RAID அட்டைகொண்டு பகிர்வுகளை உருவாக்க ஒரு உள்ளடங்கிய வன்தகடு அவசியம்.
RAID வரிசைக்கு வெளியே உள்ள தகட்டின் MBR மேல் விரும்பிய தொடக்க ஏற்றியையும் (GRUB அல்லது LILO) நிறுவவேண்டும். இது, /boot/பகிர்வை கொண்டிருக்கிற தகடாகவே இருக்கவேண்டும்.
இந்த மாற்றங்கள் செய்யப்பட்டவுடன், தங்கள் நிறுவலை முடித்து, கணினியை ஒழுங்காக தொடங்க முடியும்.
சிக்னல் 11 பிழை segmentation fault என்றும் குறிப்பிடலாம். சிக்னல் 11 பிழை என்பது, ஒதுக்கப்படாத நினைவகத்தை நிரல் அணுகியது என்று பொருள்.
நிறுவலின்போது சிக்னல் 11 பிழை நேர காரணம், உங்கள் கணினியின் bus-ன் நினைவுக்கருவியில் வன்பொருள் பிழையாக இருக்கலாம். இயக்கும்நிரலில் பிரச்சினை, அல்லது கணினியின் வன்பொருள் பிரச்சினை, இவற்றால் நினைவுக்கருவியில் வன்பொருள் பிழை ஏற்படலாம். மற்ற இயங்குதளத்தைப் போல, Red Hat Enterprise Linux அதற்கேற்ற வேலைபளுவை வன்பொருளின்மேல் அளிக்கும். சில வன்பொருள்கள், மற்ற இயங்குதளத்தில் சரியாக இயங்கினாலும் இந்த பளுவை சந்திக்க இயலாது.
Red Hat-லிருந்து புதிய நிறுவல் மேம்பாடுகள் மற்றும் பிம்பங்கள் உங்களிடம் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். புதிய பதிப்புகள் இருக்கின்றதா என்று வலைப்பக்கத்தில் பார்க்கவும். மிகப்புதிதான பிம்பங்களும் செயல்படவில்லையெனில், வன்பொருளில் சிக்கல் இருக்கலாம். பொதுவாக, இந்த பிழைகள் உங்கள் கணினிநினைவு அல்லது CPU இடைநினைவில் இருக்கலாம். BIOS -இல் CPU-இடைநினைவை அணைத்துவிடுவது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியும். பிரச்சினை வெற்றிடங்களிலா அல்லது நினைவு அட்டையிலா என்று கண்டறிய மதர்போர்டில் நினைவு அட்டைகளை மாற்றிச் செலுத்திப்பார்க்கலாம்.
வெறும் 256 MB நினைவைக் கொண்டு நிறுவலை இயக்க முயன்று பார்க்கலாம். mem=256M என்ற துவக்க தேர்வுடன் நிறுவல் நிரலைத் துவக்குவதன் மூலம் இதைச்செய்யலாம். இந்த தேர்வை முயல, நிறுவல் ப்ராம்ப்ட்டில் கீழ்கண்டவாறு உள்ளிடவும்:
mem=xxxM |
இதில் xxx என்ற இடத்தில் நினைவின் அளவு, (மெகாபைட்டில்) வரவேண்டும்.
கர்னல் இந்த கணினிக்கு கண்டுபிடிக்கும் நினைவு அளவை நிராகரிக்க இந்த கட்டளை அனுமதிக்கிறது. 16MB மட்டுமே கண்டுபிடிக்கப்படுகிற (ஆனால் உண்மையில் அதற்குமேல் RAM கொண்டுள்ள) சில பழைய கணினிகளுக்கும், வீடியோ அட்டை வீடியோ நினைவை பிரதான நினைவுடன் பகிர்ந்துகொள்ளும் சில புதிய கணினிகளுக்கும், இது தேவைப்படும்.
நிறுவல் சீடிராமின் மேல் ஊடகப்பரிசோதனையை செய்லாம். நிறுவல் ஊடகத்தின் முழுமையைச் சோதிக்கும் திறன் Red Hat Enterprise Linux நிறுவல் நிரலிக்கு உண்டு. CD, DVD, வன்தகடு ISO, மற்றும் NFS ISO நிறுவல் முறைகளோடு இது சரியாக இயங்கும். நிறுவலுக்குமுன், அல்லது நிறுவல்-தொடர்பான பிழை அறிவிக்கும் முன் எல்லா நிறுவல் ஊடகத்தையும் பரிசோதிக்க வேண்டும் என Red Hat பரிந்துரிக்கிறது. (அறிவிக்கப்படுகிற பிழைகளில் பல, சரியாக உருவாக்கப்படாத சீடிக்களால் ஏற்படுகின்றன). இந்த பரிசோதனையை உபயோகிக்க, boot: ப்ராம்ப்டில் கீழ்க்கண்ட கட்டளையை உள்ளிடவும் ( Itanium கணினிகளுக்கு elilo-ஆல் prepend செய்யவும்) :
linux mediacheck |
சிக்னல் 11 பிழை பற்றி மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட வலைமனையை அணுகவும்:
http://www.bitwizard.nl/sig11/ |