| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
Red Hat Enterprise Linux மேம்படுத்தல் பற்றிய மேற்படி விவரங்களை இணைப்பில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
Red Hat Enterprise Linux பதிப்பு 2.1 மற்றும் 3 ஐ மேம்படுத்த x86 ப்ராஸஸரில் Red Hat Enterprise Linux இல் ஆதரவு உள்ளது(அல்லது Red Hat Enterprise Linux 3 AMD64, EM64T அல்லது Itanimum கணினிகளில்), நீங்கள் தகவல்களை காப்பு எடுத்தபின் இந்த Red Hat Enterprise Linux நிறுவலின் மேல் Red Hat Enterprise Linux 4 ஐ நிறுவலாம்.
இந்த முறை உங்கள் கணினியின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்கும்.
Red Hat Enterprise Linux ஐ மீண்டும் நிறுவுதல் பற்றி மேலும் விவரங்களுகான தொழில்நுட்ப வெள்ளை அறிக்கையை http://www.redhat.com/docs/wp/ வலைமனையில் காணலாம்.
தற்போது நீங்கள் Red Hat Enterprise Linux பதிப்பு 2.1 அல்லது 3 ஐ x86 கணினியில்(அல்லதுRed Hat Enterprise Linux 3 ஐ AMD64, EM64T அல்லது Itanimum கணினியில்), பழைய நிறுவல் மேல் மேம்படுத்தி நிறுவலாம்.
எனினும், உங்கள் கணினியை மேம்படுத்த தேர்வு செய்யும் முன், சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:
தனி பணித்தொகுப்புகள் மேம்படுத்தலுகு பிறகு கோப்பு வடிவமைப்பு முறை மாற்றத்தால் வேலை செய்யாமல் போகலாம்.
Red Hat அடுக்கு மென்பொருள்(க்ளஸ்டர் ஸூட்) போன்றவற்றை மேம்படுத்த; Red Hat Enterprise Linux மேம்படுத்தலுக்கு பிறகு கைமுறையாக மேம்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாம் நபர் அல்லது ISV பயன்பாடுகள் கீழ்கண்ட மேம்படுத்தலில் தற்சமயம் வேலைசெய்யாது.
கணினியை மேம்படுத்தினால் 2.6.x மேம்படுத்தப்பட்டு நிறுவப்பட்ட பணித்தொகுப்புகள் மேம்பத்தப்படும்
இந்த செயல் ஏற்கெனவே உள்ள அமைப்பு கோப்புகளை .rpmsave விரிவாக்கத்தில் தனியாக சேமித்து பாதுகாக்கும் (உதாரணம், sendmail.cf.rpmsave). இந்த செயலை /root/upgrade.log பதிவுக்கோப்பில் பதிவு செய்து வைக்கும்.
![]() | எச்சரிக்கை |
|---|---|
மென்பொருள் வளர்கையில், அமைப்பு கோப்புகள் மாறுபடலாம். எனவே உங்கள் பழைய அமைப்புக்கோப்பை புதிய நிறுவலின் போது ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது. |
![]() | குறிப்பு |
|---|---|
உங்கள் கணினியில் உள்ள தகவல் அனைத்தையும் காப்பெடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக, நீங்கள் கணினியை மேம்படுத்தினாலோ அல்லது டூயல் பூட் கணினியாக மாற்றினாலோ வன்தகட்டில்(களில்) பாதுகாக்க வேண்டிய தகவலை காப்பு எடுப்பது அவசியம். சில சமயம் தவறு நிகழ்து தகவல் இழப்பு ஏற்பட வாய்புள்ளதால் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. |
சில மேம்படுத்தல்கள் கணினி சரியாக செயல்பட பணித்தொகுப்புகள் சிலவற்றை மீண்டும் நிறுவச்சொல்லும். பணித்தொகுப்புகளை மேம்படுத்தலை தனியாக தேர்வு செய்து நிறுவ விரும்பினால் நிறுவத்தேவையான சில பணித்தொகுப்புகள் இல்லாமல் சிக்கல் நேரும். எனினும், மேம்படுத்தல் தொடர்புடைய மென்பொருளை தேடிப்பிடித்து நிறுவும், இதற்கு உங்கள் கணினியில் இல்லாத கூடுதல் பணித்தொகுப்புகள் தேவைப்படலாம்.
நீங்கள் உங்கள் கணினியில் பகிர்வுகளை எவ்வாறு உண்டாக்கினீர்கள் என்பதை பொருத்து, மேம்படுத்தல் நிரல் கூடுதல் ஸ்வாப் கோப்புகளை சேர்க்கச்சொல்லும். மேம்படுத்தல் நிரல் ஸ்வாப் கோப்பு உங்கள் RAM அளவைவிட இருமடங்கு இல்லையெனில் , புதிய ஸ்வாப் கோப்பை சேர்க்க வேண்டுமா என கேட்கும். கணினியில் அதிக RAM இல்லையெனில் (128 MB க்கு குறைவாக); இந்த ஸ்வாப் கோப்பை சேர்ப்பது நல்லது.