| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
Red Hat Enterprise Linux கையேடுகள் இணையத்தில் அல்லது Red Hat Enterprise Linux இல் கிடைக்கும். ஆவண CD க்கள் உங்கள் Red Hat Enterprise Linux சந்தாவுடன் கிடைக்கும்.
நீங்கள் புதிய பயனராக இருந்தால் அல்லது Red Hat Enterprise Linux ஐ துவக்குவது எப்படி என்பது பற்றிய தகவல்களை பெற விரும்பினால் Red Hat Enterprise Linux கையேடு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கணினி மேலாண்மை பற்றிய கண்ணோட்டத்திற்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை அறிமுகம் ஐ பார்க்கவும். கணினி அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு அனுபவம் அதிகம் இருந்தால் கணினி நிர்வாகம் பற்றி மட்டும் தெரிந்து கொள்ள விரும்பினால் Red Hat Enterprise Linux குறிப்பு வழிகாட்டி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் கணினியை பாதுகாப்பது பற்றிய தகவல் தேவைப்பட்டால் Red Hat Enterprise Linux பாதுகாப்பு கையேடு ஐ பார்க்கவும்.
Red Hat Enterprise Linux HTML, PDF, மற்றும் RPM பதிப்புகளின் கையேடு ஆகியவை, ஆவணங்களுக்கான CD யிலும் வலைமனை http://www.redhat.com/docs/ யிலும் கிடைக்கும்.
![]() | குறிப்பு |
|---|---|
இந்த கையேட்டில் தற்போதைய தகவல்கள் இருந்தாலும், Red Hat Enterprise Linux வெளியீட்டு அறிக்கை ஐ பார்த்து ஆவணமாக்கத்திற்கு பின் நிகழ்ந்த மிக சமீபத்தைய தகவல்கள் தெரிந்துகொள்ளவும். இவைகள் Red Hat Enterprise Linux CD #1 மற்றும் http://www.redhat.com/docs/ வலைமனையில் கிடைக்கும். |