| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. Itanium கணினி பற்றிய தகவல் | அடுத்து |
Red Hat Enterprise Linux ஐ Itanium த்தில் நிறுவதற்கு முன் EFI ஷெல் என்ன பணிகள் செய்யும் என்னென்ன தகவல்கள் தரும் போன்றவற்றை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
EFI ஷெல் பயன்பாடுகளை துவக்க பயன்படும், கன்சோல் இடைமுகம் (Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் போன்றவற்றை துவக்கும்). EFI விதிமுறைகள் மற்றும் சாதன இயக்கிகளை ஏற்றி சிறு நிரல்களை சுலபமான இயக்க முடியும். DOSகன்சோல் போல இதில் FAT16 (VFAT) க்கென வடிவமைக்கப்பட்ட ஊடகங்களை பயன்படுத்த முடியும்.
EFI ஷெல்லில் உள்ள பொதுவான பயன்பாடுகள், EFI பகிர்வுகளை உருவாக்க பயன்படும். இதில் edit, type, cp, rm, and மற்றும்mkdir. For போன்ற கட்டளைகள் இருக்கும். மேலும் விவரங்களுக்குhelp என்பதை EFI ஷெல்லில் தட்டச்சு செய்யவும்.
துவக்க இயக்கியான ELILO. EFI ஷெல்லில் உள்ளது, EFI பற்றிய கூடுதல் தகவலுக்கும் கீழ்கண்ட வலைமனையை அணுகவும் :
http://developer.intel.com/technology/efi/index.htm |
mapகட்டளை EFI ஆல் புரிந்துகொள்ளக்கூடிய அனைத்து கட்டளைகளையும் பட்டியலிடும். Itanium கணினி துவங்கும் EFI ஷெல்லில் துவங்கும் போது கீழ் கண்ட வரிசையில் கணினியை சோதிக்கும்.
LS-120 இயக்கி (இதற்கு ஊடகம் இருந்தால்)
முதன்மை IDE இடைமுகத்தில் உள்ள IDE வன்தகடு
இரண்டாவது IDE இடைமுகத்தில் உள்ள IDE வன்தகடு
SCSI இடைமுகத்தில் உள்ள SCSI வன்தகடு
IDE இடை முகத்தில் உள்ள CD-ROM இயக்கி
SCSI இடை முகத்தில் உள்ள CD-ROM இயக்கி
கணினியின் ஓட்டுகள் பற்றிய தகவலை பார்க்க கீழ்கண்ட கட்டளையை EFI செல்லில் தட்டச்சு செய்யவும்.
map |
உங்கள் கணினி, மென்பொருள்களை ஆராய்ந்த வரிசையில், அவைகளின் விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. FAT16 கோப்புகள், IDE இயக்கி, SCSI இயக்கி IDE CD-ROM இயக்கி மற்றும் SCSI CD-ROM இயக்கி என வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
உதாரணமாக map கட்டளை இவ்வாறு இருக்கும்.
Device mapping table fs0 : VenHw(Unknown Device:00)/HD(Part1,Sig00000000) fs1 : VenHw(Unknown Device:80)/HD(Part1,Sig00000000) fs2 : VenHw(Unknown Device:FF)/CDROM(Entry1)/HD(Part1,Sig00000000) blk0 : VenHw(Unknown Device:00) blk1 : VenHw(Unknown Device:00)/HD(Part1,Sig00000000) blk2 : VenHw(Unknown Device:80) blk3 : VenHw(Unknown Device:80)/HD(Part1,Sig00000000) blk4 : VenHw(Unknown Device:80)/HD(Part2,Sig00000000) blk5 : VenHw(Unknown Device:80)/HD(Part3,Sig00000000) blk6 : VenHw(Unknown Device:80)/HD(Part3,Sig00000000)/HD(Part1,Sig725F7772) blk7 : VenHw(Unknown Device:FF) blk8 : VenHw(Unknown Device:FF)/CDROM(Entry1) blk9 : VenHw(Unknown Device:FF)/CDROM(Entry1)/HD(Part1,Sig00000000) |
இந்த எடுத்துக்காட்டில் LS-120 வட்டு LS-120 இயக்கியிலும் CD-ROM, CD-ROM இயக்கியிலும் உள்ளது fs இல் துவங்குபவை EFI ஆல் படிக்க முடிந்த FAT16 கோப்புகள் blkஇல் துவங்குபவை EFI ஆல் புரிந்துகொள்ளக்கூடிய தடை செய்யப்பட்ட சாதனங்கள். கோப்பு அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட சாதனங்களின் பட்டியல் சேதனை நடந்த வரிசையில் அமைந்திருக்கும். fs0 LS-120 இல் உள்ள கணினி பகிர்வு. fs1 வன்தகட்டில் உள்ள கணினி பகிர்வு, fs2CD-ROM இயக்கியில் உள்ள கணினி பகிர்வு.
உங்கள் கணினியில் பகிர்வுகளை உருவாக்கும் போது FAT16 (VFAT) வடிவமைப்புள்ள /boot/efi/ ஏற்றப்புள்ளியாக கொண்ட பகிர்வை உருவாக்க வேண்டும்.இந்த பகிர்வில் நிறுவப்பட்ட லினக்ஸ் கர்னலும் ELILO அமைப்பு கோப்பும் (elilo.conf) இருக்கும்.elilo.conf கோப்பில் நீங்கள் துவக்க விரும்பும் கர்னலின் பட்டியல் இருக்கும்.