4.28. Itanium கணினி — கணினியை துவக்குதல் மற்றும் நிறுவிய-பின் அமைத்தல்

இந்த பகுதியில் உங்கள் Itanium கணினியில் Red Hat Enterprise Linux ஐ துவக்குவது மற்றும் EFI மாறிகளை Red Hat Enterprise Linux இல் அமைப்பதைப் பற்றி தெரிந்துகொள்வீர்கள்.

நிறுவல் முடிந்து கணினியை மீண்டும் துவக்கி, Red Hat Enterprise Linux துவக்க இந்த கட்டளையை உள்ளிடவும்:

elilo

elilo என தட்டச்சு செய்ததும், /boot/efi/elilo.conf இல் உள்ள இயல்பான கர்னல் காட்டப்படும். (கோப்பில் காட்டப்படும் முதல் கர்னலே இயல்பான கர்னலாக எடுத்துக்கொள்ளப்படும்)

வேறு கர்னலிலிருந்து ஏற்ற விரும்பினால் elilo கட்டளையை தொடர்ந்து, /boot/efi/elilo.conf கோப்பில் உள்ள கர்னலின் அடையாளாப்பெயரை தட்டச்சு செய்யவும். உதாரணமாக linux, என்ற கர்னலை ஏற்ற பின்வரும் கட்டளையை தட்டச்சு செய்யவும்:

elilo linux

நிறுவப்பட்ட கர்னலின் பெயர் தெரியவில்லை எனில், EFI இல் /boot/efi/elilo.conf கோப்பில், கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பார்க்கலாம்.

  1. Shell> ப்ராம்டுக்கு செல்லவும். சாதனத்தை கணினி பகிர்வுக்கு மாற்றவும். (/boot/efi லினக்ஸில் ஏற்றப்பட்ட பகிர்வு). உதாரணம், fs0 துவக்க பகிர்வு எனில், fs0: என EFI ஷெல் ப்ராம்டில் தட்டச்சு செய்யவும்.

  2. fs0:\> இல் ls என தட்டச்சு செய்து உங்கள் பகிர்வுகள் சரியா என பார்த்துக்கொள்ளவும்

  3. பிறகு கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவும்

    Shell>type elilo.conf

    இந்த கட்டளை அமைப்புக்கோப்பைக் காட்ட பயன்படும். ஒவ்வொரு பத்தியிலும் label எனத்துவங்கும் வரியும், அதைதொடர்ந்து கர்னல் பெயரும் இருக்கும்.வேறு கர்னலில் துவக்க விரும்பினால் elilo கட்டளைக்கு பிறகு , லேபில் பெயரை உள்ளிட வேண்டும்.

4.28.1. நிறுவிய-பின் துவக்க இயக்கி தேர்வு

கர்னலை ஏற்றுவதற்கு முன்; மற்ற துவக்க வகைகளான single ஒரு பயனராக நுழைய, அல்லது mem=1024MRed Hat Enterprise Linux 1024 MB நினைவகத்தை பயன்படுத்த வலியுறுத்த குறிப்பிடலாம். துவக்க ஏற்றியில் தேர்வை அனுப்ப EFI ஷெல்லில் கீழ்கண்டவைகளை உள்ளிடவும். (இதில் linuxஎன்பது நீங்கள் பயன்படுத்த விரும்பும் கர்னல்.option என்பது நீங்கள் துவக்க விரும்பும் அளவுருக்கள்):

elilo linux option

4.28.2. Red Hat Enterprise Linux தானாக துவங்குதல்

Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் Itanium கணினியை மென்பொருள் வழியாக துவக்க விரும்பினால் elilo மற்றும் துவக்க தேர்வை EFI ஷெல்லில் தட்டச்சு செய்ய வேண்டும். உங்கள் கணினி Red Hat Enterprise Linux ஐ தானாக துவக்க வேண்டுமெனில், EFI துவக்க மேலாளரை அமைக்க வேண்டும்.

EFI துவக்க மேலாளரை அமைத்தல்(உங்கள் வன்பொருள் தேவையை பொருத்து மாறுபடும்)

  1. Itanium கணினியை துவக்கி துவக்க தேர்வு மேலாண்மை மெனுவை, EFI துவக்க மேலாளர் மெனுவிலிருந்து தேர்வு செய்யவும்.

  2. துவக்க தேர்வை சேர்க்கவும் என்பதை முதன்மை மெனுவிலிருந்து தேர்வு செய்.

  3. /boot/efi/ லினக்ஸில் ஏற்றப்பட்ட கணினி பகிர்வை தேர்வு செய்யவும்

  4. elilo.efi கோப்பை தேர்வு செய்யவும்

  5. புதிய விளக்கத்தை உள்ளிடு: ப்ராம்டில், Red Hat Enterprise Linux 4 என தட்டச்சு செய்யவும், அல்லது, EFI துவக்க மேலாளர் மெனுவில் காட்ட வேண்டிய பெயரை உள்ளிடவும்

  6. துவக்க தேர்வின் தகவல் வகையை உள்ளிடு பகுதியில். துவக்க தேர்வு எதுவும் இல்லை , மேலும் ELILO துவக்க தேர்வுக்கு எந்த அளவுருவும் அனுப்ப விருப்பமில்லை எனில் துவக்க தேர்வு இல்லை பகுதியில் N என குறிப்பிடவும். குறிப்பிட்ட தேர்வை துவக்க இயக்கிக்கு அனுப்ப விரும்பினால், /boot/efi/elilo.conf கோப்பில் உங்கள் தேவையை குறிப்பிட வேண்டும்.

  7. NVRAM இல் மாற்றங்களை சேமிக்க ப்ராம்டில் Yes என உள்ளிடவும், இது EFI துவக்க கண்காணிப்பு மேலாண்மை மெனுவை தரும்.

  8. அடுத்து, Red Hat Enterprise Linux 4 மெனுவை இயல்பான மெனுவாக தேர்வுசெய்யலாம். இதற்கு துவக்க தேர்வுகளின் பட்டியலில் Red Hat Enterprise Linux 4 ஐ அம்புக்குறிவிசையை பயன்படுத்தி மற்றும் [u] வை தட்டச்சு செய்து பட்டியலின் மேல் பகுதிக்கு கொண்டு செல்லாம். இதே போல் பட்டியலின் கீழ் பகுதிக்கு செல்ல [d] விசையை அழுத்தவும். துவக்கும் வரிசையை மாற்றிய பின், NVRAM இல் மாற்றங்களை சேமிக்கவும்.வெளியேறு என்பதை க்ளிக் செய்து வெளியேறவும்.

  9. துவங்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை அமைக்க Set Auto Boot TimeOut => Set Timeout Value என்பதை, மெனுவை பயன்படுத்தி தேர்வு செய்யவும்.

  10. EFI மேலாளருக்கு திரும்ப, வெளியேறு என்பதை தேர்வு செய்யவும்

4.28.2.1. துவக்க ஸ்கிரிப்டை பயன்படுத்தல்

ELILO துவக்க மேலாளர் Red Hat Enterprise Linux ஐ தானாக துவக்குமாறு அமைப்பதே நல்லது. எனினும் ELILO துவங்குவதற்கு முன், கூடுதல் கட்டளைகளை இயக்க விரும்பினால், startup.nsh ஸ்கிர்ப்டை உருவாக்கலாம். இந்த கோப்பில் கடைசி கட்டளைelilo என இருக்கவேண்டும்.

startup.nsh ஸ்கிரிப்ட் /boot/efiபகிர்வாக, (/boot/efi/startup.nsh) இல் கீழ்கண்ட உரையுடன் இருக்கும்:

echo -off
your set of commands
elilo

துவக்க இயக்கியில் தேர்வுகளை அனுப்ப (பகுதி 4.28.1 பார்க்கவும்)அவைகளை elilo கட்டளைக்கு பின் சேர்க்கவும்.

Red Hat Enterprise Linux துவக்கிய பின் இந்த கோப்பை உருவாக்கலாம், அல்லது EFI ஷெல்லில் அமைக்க தொகுப்பியை பயன்படுத்தலாம். EFI ஷெல்லை பயன்படுத்த Shell> ப்ராம்டுக்கு சென்று, சாதனத்தை கணினி பகிர்வாக மாற்றவும். (/boot/efi லினக்ஸில் ஏற்றப்பட்ட பகிர்வு). உதாரணம், fs0 கணினி பகிர்வு எனில், fs0: என, EFI ஷெல் ப்ராம்ட்டில் தட்டச்சு செய்யவும். சரியான பகிர்வில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய ls என தட்டச்சு செய்யவும் . பிறகு edit startup.ns. கோப்புகளில் தேவையான தகவலை உள்ளிட்டு சேமிக்கவும்.

அடுத்த முறை கணினியை துவக்கும் போது, உங்கள் கணினி EFI startup.nsh கண்டுபிடித்து அதில் உள்ள கட்டளைகள் படி துவங்கும். EFI யில் துவங்குவதிலிருந்து தவிர்க்க [Ctrl]-[c] விசைகளை அழுத்தவும். இது துவக்க செயலை நிறுத்தி, EFI ஷெல் ப்ராம்டுக்கு உங்களை அழைத்து செல்லும்.