| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 4. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
எந்த நிறுவல் முறையை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள்? கீழ்கண்ட நிறுவல் முறைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.
CD-ROM இயக்கியும் Red Hat Enterprise Linux யும் இருந்தால், இந்த முறையை பயன்படுத்தலாம். இதற்கு பகுதி 4.5 இல் உள்ள CD-ROM நிறுவலை பார்க்கவும்
Red Hat Enterprise Linux இன் ISO பிம்பத்தை வன்தகட்டில் நகலெடுத்திருந்தால், இந்த முறையை பயன்படுத்தலாம். இதற்கு துவக்க CD-ROM தேவை. வன்தகடு நிறுவலுக்கு பகுதி 4.6 ஐ பார்க்கவும்
NFS சேவகன் வழியாக ISO பிம்பத்தை அல்லது Red Hat Enterprise Linux இன் கண்ணாடி பிம்பத்தை நிறுவ விரும்பினால், இந்த முறையை பயன்படுத்தலாம்.இதற்கு CD-ROM ஐ துவக்க வேண்டும் ( linux askmethod ஐ துவக்க தேர்வாக பயன்படுத்தவும்). பகுதி 4.8 இல் உள்ள வலைப்பின்னல் நிறுவல் பகுதியை பார்க்கவும். குறிப்பு NFS நிறுவலுக்கு GUI பாங்கை பயன்படுத்தலாம்.
FTP சேவகனிலிருந்து நேரடியாக நிறுவினால், இந்த முறையை பயன்படுத்தலாம். இதற்கு துவக்க CD-ROM தேவை(linux askmethod துவக்க தேர்வை பயன்படுத்தவும்)FTP நிறுவல் பற்றிய விவரங்களுக்கு பகுதி 4.9,ஐ பார்க்கவும்.
HTTP சேவகனிலிருந்து நேரடியாக நிறுவினால், இந்த முறையை பயன்படுத்தலாம். இதற்கு துவக்க CD-ROM தேவை(linux askmethod துவக்க தேர்வை பயன்படுத்தவும்)HTTP நிறுவல் பற்றிய விவரங்களுக்கு பகுதி 4.10,ஐ பார்க்கவும்.