| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. துவக்கம் | அடுத்து |
Red Hat Enterprise Linux ஐ நிறுவ பல முறைகள் உள்ளன.
CD-ROM லிருந்து நிறுவ Red Hat Enterprise Linux 4 ஐ வாங்கி இருக்க வேண்டும், அல்லது Red Hat Enterprise Linux CD-ROM உங்களிடம் இருக்க வேண்டும், மற்றும் CD-ROM இயக்கி இருக்க வேண்டும். பொதுவாக புதிதாக வாங்கிய கணினியில் CD-ROM யிலிருந்து துவக்க ஆதரவு உண்டு. CD-ROM லிருந்து துவக்க உங்கள் கணினிக்கு ஆதரவு உண்டு எனில், CD-ROM நிறுவலை தொடர்வதே சுலபமான வழியாகும்.
CD-ROM இயக்கியிலிருந்து துவக்க BIOS இல் மாற்றம் செய்ய வேண்டும். BIOS இல் மாற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவலுக்கு பகுதி 4.3.1 ஐ பார்க்கவும்
CD-ROM இயக்கியை பயன்படுத்தி துவங்கலாம், நீங்கள் உங்கள் தனி CD-ROM ஐ உருவாக்கி நிறுவல் நிரலை துவக்கலாம். வலைப்பின்னல் வழியாக நிறுவும் போது அல்லது வன்தகடு வழியாக நிறுவும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பகுதி 2.4.2 பார்த்து தகவல் தெரிந்துகொள்ளவும்.
CD-ROM இயக்கியிலிருந்து துவக்க முடியவில்லையெனில், USB சாதனமான USB பேனா சாதனத்திலிருந்து துவக்கலாம், கீழ்கண்ட மாற்று துவக்க முறைகளும் உள்ளன.
USB பேனா சாதனத்தை கொண்டு துவக்க dd கட்டளையை பயன்படுத்தி diskboot.img கோப்பை CD-ROM 1. இல் உள்ள /images/ அடைவிலிருந்து நகலெடுக்கவும், உதாரணமாக:
dd if=diskboot.img of=/dev/sda |
இந்த முறையில் துவக்க உங்கள் BIOS இல், USB சாதனத்திலிருந்து துவக்க ஆதரவு இருக்க வேண்டும்.
isolinux (Itanium கணினிகளில் இல்லை) Red Hat Enterprise Linux நிறுவல் CD யில் துவக்க பயன்படும். நிறுவல் நிரலை துவக்கும் CD-ROM ஐ உருவாக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்:
Red Hat Enterprise Linux CD #1 லிருந்து isolinux/ அடைவை தற்காலிக அடைவிற்கு நகலெடுக்கவும்.(<path-to-workspace> என குறிப்பிடப்பட்டுள்ளது). இதற்கு கீழ்கண்ட கட்டளையை பயன்படுத்தவும்.
cp -r <path-to-cd>/isolinux/ <path-to-workspace> |
அடைவை <path-to-workspace> நீங்கள் உருவாக்கிய அடைவிற்கு மாற்றவும்
cd <path-to-workspace> |
நீங்கள் நகலெடுத்த கோப்புகளின் அனுமதியை சரிபார்த்துகொள்ளவும்.
chmod u+w isolinux/* |
இறுதியாக, கீழ்கண்ட கட்டளையை பயன்படுத்தி ISO பிம்ப கோப்பை உருவாக்கவும்.
mkisofs -o file.iso -b isolinux.bin -c boot.cat -no-emul-boot \ -boot-load-size 4 -boot-info-table -R -J -v -T isolinux/ |
![]() | குறிப்பு |
|---|---|
மேலே உள்ள கட்டளை அச்சுக்காக இரண்டு வரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளையை இயக்கும் போது, ஒரே கட்டளையாக , ஒரே வரியில் உள்ளிடவும். |
கிடைத்த ISO பிம்பத்தை CD யில் எழுதவும்(கோப்பின் பெயர்file.iso மற்றும் <path-to-workspace>)