| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 2. துவக்கம் | அடுத்து |
![]() | குறிப்பு |
|---|---|
வலைப்பின்னல் சார்ந்த நிறுவலை தொடர விரும்பினால் உங்கள் நிறுவல் CD (அல்லது மற்ற வகை CD க்கள்) உங்கள் நிறுவல் பகிர்வில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். இயக்கில் CD ஏதாவது இருந்தால் நிறுவலின் போது சிக்கல் ஏற்படும். |
Red Hat Enterprise Linux க்கான நிறுவல் மீடியா வலைப்பின்னலிலோ (NFS, FTP, HTTP வழியாக) அல்லது தனி சேமிப்பகத்திலோ இருக்க வேண்டும். NFS, FTP, அல்லது HTTP நிறுவலை தொடர விரும்பினால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
வலைப்பின்னல் வழியாக நிறுவ NFS, FTP, அல்லது HTTP சேவகன் தனிகணினியாக இருக்க வேண்டும். அதில் RedHat/ அடைவு இருக்க வேண்டும். RedHat/base/ மற்றும் RedHat/RPMS/ அடைவில் நிறுவலுக்காக CD-ROM களின் கோப்புகள் அனைத்தும் இருக்க வேண்டும்.
![]() | குறிப்பு |
|---|---|
குறிப்பிட்டுள்ள அடைவு /location/of/disk/space/ ஐ குறிக்கும். இதன் பொருள் இது ஒரு அடைவு. இதில் RedHat/ டிஸ்டிரிபூஷன் அடைவு இருக்காது.உதாரணமாக உங்களிடம் நிறுவல் கோப்பு /export/rhel/ ஸ்டேஜிங் சேவகனில் இருந்தால் /location/of/disk/space//export/rhel/ ஆக இருக்கும். |
CD-ROM இல் உள்ள நிறுவல் கோப்புகள் அனைத்தையும் நிறுவல் ஸ்டேஜிங் சேவகனில் உள்ள RedHat/ அடைவிற்கு நகர்த்தவும். அதன் பின் பின்வருமாறு செய்யவும்.
ஒவ்வொரு பைனரி CD-ROM மிலும் கீழ்கண்ட கட்டளையை இயக்கவும்.
mount /mnt/cdrom
cp -var /mnt/cdrom/RedHat /location/of/disk/space
இதில் /location/of/disk/space/ என்பது நீங்கள் உருவாக்கிய அடைவாகும் /export/rhel/
umount /mnt/cdrom/
வெளியீட்டு குறிப்பு RedHat அடைவில் சேர்க்கப்படவில்லை. வெளியீட்டு அறிக்கையை குறிப்பிட்ட இடத்தில் நகலெடுத்தால் மட்டுமே Red Hat Enterprise Linux நிறுவலின் போது கிடைக்கும்
cp /mnt/cdrom/RELEASE-NOTES*.html /location/of/disk/space/
வெளியீட்டு அறிக்கையை பார்க்க - http://www.redhat.com/docs/.
அடுத்து, /location/of/disk/space/ நிறுவல் நிரலை NFS, FTP, அல்லது HTTP வழியாக கிளையன் கணினிகள் அணுகும்படி வைக்கவும்.
NFS க்கு, /etc/exports ஐ சேர்ப்பதன் மூலம் அடைவை குறிப்பிட்ட கணினியில் ஏற்றுமதி செய்யவும்.
/location/of/disk/space client.ip.address(ro,no_root_squash) |
எல்லா கணினியிலும் ஏற்றுமதி செய்ய (எல்லா NFS க்கும் பொருந்தாது),கீழ்கண்ட வரியை சேர்க்கவும்:
/location/of/disk/space *(ro,no_root_squash) |
NFS டெமானை துவக்கி ( Red Hat Enterprise Linux கணினியில் துவக்கி /sbin/service nfs start ஐ பயன்படுத்தவும்). NFS ஏற்கெனவே இயக்கத்தில் இருந்தால் அமைப்பு கோப்பை ஏற்றவும்(Red Hat Enterprise Linux கணினியில் /sbin/service nfs reload பயன்படுத்தவும்)
Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு இல் NFS கீழ் கண்ட படி பகிர்ந்துகொள்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
RedHat/ அடைவு NFS பகிர்வு அடைவில் இல்லை எனில், தவறான பாதை ஏற்றப்பட்டது அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டது.
FTP மற்றும் HTTP நிறுவல்கள் இரண்டாது வகை கிளை அமைப்புக்கு ஆதரவு தரும். நிறுவல் CD-ROM இல் உள்ளவைகளை பார்க்க வசதியாக, FTP அல்லது HTTP சேவகனில் CD-ROM அல்லது ISO பிம்பத்தை கீழ்கண்ட ஏற்றப்புள்ளியில் ஏற்றவும் (இங்கே X CD-ROM அல்லது ISO பிம்பங்களின் எண்ணிக்கை):
/location/of/disk/space/discX/ |
உதாரணமாக:
mount -o loop CD1.iso /location/of/disk/space/disc1/ |
NFS நிறுவலுக்கு முழு நிறுவல் கிளையை நகலெடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ISO (அல்லது CD-ROM) பிம்பங்களை பயன்படுத்தலாம். தேவையான ISO பிம்பங்களை அடைவிற்கு நகர்த்தியதும் (the binary Red Hat Enterprise Linux CD-ROMs), NFS வழியாக நிறுவு என்பதை தேர்வு செய்யவும். பிறகு நிறுவல் நிரலுக்கான அடைவை குறிப்பிட்டு நிறுவலை தொடரவும்.
NFS நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க ISO பிம்பங்களை சோதிப்பது நல்லது. ISO பிம்பத்தை சோதிக்க md5sum நிரலை பயன்படுத்தவும்.(md5sum நிரல் பல இயங்குதளங்களில் உள்ளது).md5sum ISO பிம்பம் இருக்கும் லினக்ஸ் கணினியில் இருக்கும்.
![]() | குறிப்பு | |
|---|---|---|
Red Hat Enterprise Linux நிறுவல் நிரலால் நிறுவும் ஊடகத்தின் நம்பகத்தன்மையை சோதிக்க முடியும். இது CD, DVD, வன் தகடு ISO, மற்றும் NFS ISO வில் வேலை செய்யும். Red Hat நிறுவலை துவங்கும் முன் ஊடகத்தை சோதிக்க வலியுறுத்தும். இதனால் நிறுவல் தொடர்பான பிழைகள் தவிர்க்கப்படலாம்.(தவறாக எழுத்தப்பட்ட சிடிக்களால் அதிக பிழைகள் நேர்வதால்) .இந்த சோதனையை பயன்படுத்த கீழ்கண்ட கட்டளையை இயக்கவும். boot: ப்ராம்டில் (elilo Itanium கணினிக்காக உருவாக்கப்பட்டது) :
|
updates.img கோப்பு நிறுவல் நிரலுள்ள அடைவில் இருந்தால் , மேம்படுத்தலுக்கு உதவும். anaconda RPM பணித்தொகுப்பிலுள்ள install-methods.txt கோப்பை பார்த்து Red Hat Enterprise Linux ஐ நிறுவும் மற்றும் மேம்படுத்தும் முறைகளை தெரிந்துகொள்ளவும்.
![]() | குறிப்பு |
|---|---|
நீங்கள் ஒரு குறிப்பிட்ட வெளியீடு அல்லது Red Hat Enterprise Linux க்கான ISO பிம்பங்களை மட்டுமே ஒரு அடைவில் வைக்துக்கொள்ள முடியும். |