| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 4. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
சேவை, மென்பொருள் மேலாண்மை, மற்றும் ஆதரவு ஆவணத்தில் உள்ள உறுப்பினர் சேவையை பயன்படுத்தும் முன், உங்களை Red Hat இல் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்யும் முறை கீழ்கண்ட தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது:
Red Hat பயனர் கணக்கு பெயரை உள்ளிடவும்
உறுப்பினர் எண்ணை பயன்படுத்தவும்
உங்கள் கணினியை இணைக்கவும்
உங்கள் Red Hat Enterprise Linux நிறுவி முடித்து கணினியை முதல் முறை துவங்கும் போது அமைப்பு முகவர், Red Hat உடன் பதிவு செய்துகொள்ள திரை தோன்றும். அமைப்பு முகவர் இல் தேவையான தகவல்களை உள்ளிட்டு உங்களை பதிவு செய்துகொள்ளவும்.
அமைப்பு முகவர் நிறுவலை முடிக்க முடியவில்லையெனில் (இணைய இணைப்பு அவசியம்), Red Hat இணையத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளhttp://www.redhat.com/register/ வலைமனையை பார்க்கவும்.
உங்களிடம் Red Hat பயனர் கணக்கு பெயர் இல்லை எனில், அவைகளை உருவாக்க அமைப்பு முகவர் ஐ அல்லது வலைமனையை பார்க்கவும்:
https://www.redhat.com/apps/activate/newlogin.html |
Red Hat பயனர் கணக்கு பெயரை பயன்படுத்தி கீழ்கண்ட சலுகைகளை பெறலாம்:
மென்பொருள் புதுப்பித்தல், Red Hat வலைப்பின்னல் வழியாக பிழை திருத்தம் மற்றும் கண்காணிப்பு
Red Hat தொழிநுட்ப ஆதரவு வளங்கள், ஆவணம் , மற்றும் அறிவுகிடங்கு
Red Hat பயனர் பெயரை மறந்துவிட்டால், Red Hat வலைமனையில் தேடலாம்:
https://rhn.redhat.com/help/forgot_password.pxt |
உங்கள் உறுப்பினர் எண் நீங்கள் வாங்கிய மென்பொருளுடன் இருக்கும். உங்கள் கட்டில் உறுப்பினர் எண் இல்லையெனில், உங்களுக்கான உறுப்பினர் பதிவு தானாக செயல்படுத்தப்பட்டது என கொண்டு இந்த பகுதியை தவிர்கலாம்.
அமைப்பு முகவர் திரையிலோ அல்லது http://www.redhat.com/register/ உங்கள் உறுப்பினர் எண்ணை உள்ளிடலாம்.
Red Hat வலைப்பின்னல் கிளையன் பதிவு உங்கள் கணினியை மேம்படுத்த, மற்றும் கணினி மேலாண்மைக்கு உங்களுக்கு உதவும். இந்த வலைபின்னலில் இணைய மூன்று வழிகள் உள்ளன:
அமைப்பு முகவர் — போது வன்பொருள் தகவலை அனுப்பு, மற்றும் பணித்தொகுப்பு பட்டியலை அனுப்பு இரண்டையும் தேர்வு செய்ய வேண்டும்.
அமைப்பு முகவர் முடிந்ததும், — முதன்மை மெனுவில், கணினி கருவிகள், பகுதிக்கு சென்று Red Hat வலைப்பின்னல் என்பதை தேர்வு செய்யவும்.
அமைப்பு முகவர் முடிந்ததும் — கீழ்கண்ட கட்டளையை கட்டளை வரியில் root பயனராக உள்ளிடவும்.
/usr/bin/up2date --register