C.4. நிறுவிய பின் ஏற்படும் சிக்கல்கள்

C.4.1. x86-அடிபடையிலான கணினிகளில் வரைகளை GRUB திரையில் சிக்கல் உள்ளதா?

GRUB இல் சிக்கல் நேர்ந்தால், வரைகலை துவக்க திரையை செயல்நீக்கம் செய்யவேண்டும். இதை செய்ய , ரூட் பயனாராக கணினியில் நுழைந்து /boot/grub/grub.conf கோப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

grub.conf கோப்பில், splashimage கட்டளைக்கு முன் # ஐ தட்டச்சு செய்து தேவையற்ற கட்டளையாக்கவும்.

[Enter] விசையை அழுத்தி திருத்தும் பாங்குக்கு செல்லவும்.

துவக்க இயக்கி திரை வந்ததும் b என தட்டச்சு செய்து கணினியை துவக்கவும்.

மீண்டும் துவக்கியதும் grub.conf கோப்பில் செய்த மாற்றங்கள் செயல்படத்துவங்கும்.

வரைகலை திரையை மீண்டும் செயல்படுத்த grub.conf கோப்பில் # குறியை நீக்கவும் அல்லது (நீக்கிய வரியை சேர்க்கவும்

C.4.2. வரைகலை இடைமுகத்தில் துவங்குகிறது

நீங்கள் X ஐ நிறுவி Red Hat Enterprise Linux ஐ துவக்கும் போது X விண்டோஸ் தோன்றவில்லை எனில் , startx, கட்டளையை பயன்படுத்தி கணினியை துவக்கலாம்

கட்டளையை உள்ளிட்டு [Enter] விசையை அழுத்தியதும் மேல்மேசை தோன்றும்

குறிப்பு, இதை ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டிய செயலாகும்

உங்கள் கணினியில் உள்நுழையும் திரையை அமைக்க /etc/inittab கோப்பில் உள்ள runlevel பகுதியில் உள்ள எண்ணை மாற்ற வேண்டும். மாற்றிய பின் கணினியை துவக்கினால் உள்நுழை திரை பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும்.

ஷெல் ப்ராம்டை திறந்து பயனர் கணக்கில் நுழைந்திருந்தால் முதன்மை பயனர் கணக்குக்கு மாற su கட்டளையை பயன்படுத்தவும்.

இப்போது; gedit /etc/inittab என தட்டச்சு செய்து gedit தொகுப்பியில் மாற்றங்கள் செய்வதற்காக /etc/inittab கோப்பு திறக்கும். கீழே உள்ளது போன்ற கோப்பின் பகுதி தெரியும்.

# Default runlevel. The runlevels used by RHS are:
#   0 - halt (Do NOT set initdefault to this)
#   1 - Single user mode
#   2 - Multiuser, without NFS (The same as 3, if you do not have networking)
#   3 - Full multiuser mode
#   4 - unused
#   5 - X11
#   6 - reboot (Do NOT set initdefault to this)
# 
id:3:initdefault:

கன்சோல் உள்நுழைவிலிருந்து திரைவழியாக உள் நுழைய . கீழ்கண்ட வரி எண்களை மாற்றவும். id:3:initdefault:3 லிருந்து 5 க்கு மாற்றவும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

runlevel இன் எண்ணை மறட்டும் 3 லிருந்து 5 ஆக மாற்றவும்

மாற்றிய வரிகள் பின்வருமாறு இருக்க வேண்டும்

id:5:initdefault:

நீங்கள் செய்த மாற்றத்தில் திருப்தி இருந்தால், [Ctrl]-[Q] விசையை அழுத்தி வெளியேறவும். இவ்வாறு வெளியேறும் போது உரையாடல் பெட்டி தோன்றி சேமிக்கவா என கேட்கும் சேமி பட்டனை க்ளிக் செய்து சேமிக்கவும்.

அடுத்த முறை கணினியை துவக்கும் போது உள்நுழைவதற்கான திரை தோன்றும்

C.4.3. X விண்டோஸ் கணினி(GUI) இல் உள்ள சிக்கல்கள்

X (X விண்டோஸ் கணினி) யை துவக்குவதில் சிக்கல் இருந்தால் ஒரு வேலை நிறுவலின் போது X ஐ தேர்வு செய்யாமல் விட்டிருக்கலாம்.

X ஐ நிறுவ விரும்பினால் Red Hat Enterprise Linux CD-ROM லிருந்து அதற்கான பணித்தொகுப்பை நிறுவலாம் அல்லது உங்கள் கணினியை மேம்படுத்தலாம்.

மேம்படுத்து என்பதை தேர்வு செய்திருந்தால், X விண்டோஸ் கணினி பணித்தொகுப்பை தேர்வு செய்து, GNOME, KDE அல்லது இரண்டையும் தேர்வு செய்து மேம்படுத்தலை தொடரவும்.

C.4.4. ரூட் அல்லாத பயனர்களின் X சேவகனில் சிதைவு ஏற்பட்டதா?

X சேவகனை ரூட் ஆக இல்லாமல் சாதாரண பயனராக பயன்படுத்தும் போது சிதைவு ஏற்பட்டால், முழு கோப்பு அமைப்பு அனுமதிகளும் உங்களுக்கு தேவை (அல்லது, வன்தகட்டில் இடமில்லாமல் இருக்கலாம்).

உங்கள் சிக்கலை சரிவர தெரிந்துகொள்ள கீழ்கண்ட கட்டளையை இயக்கவும்

     
df -h

df பகிர்வில் இடமிருக்கிறதா என தெரியப்படுத்தும். df மற்றும் இந்த கட்டளையோடு தொடர்புடைய கூடுதல் கட்டளைகளை பற்றி தெரிந்துகொள்ள (அதாவது -h போன்ற துணை கட்டளைகள்), df உதவிப்பக்கங்களை பார்க்க man df என ஷெல் ப்ராம்டில் தட்டச்சு செய்யவும்.

பகிர்வு 100% பயன்படுத்தப்பட்டோ அல்லது 90% அல்லது 95% க்கு மேல் பயன்படுத்தப்பட்டோ இருக்கிறதா என பார்க்கவும்./home/ மற்றும் /tmp/ அடைவுகள் பயனரால் சிலசமயம் முமுமையாக பயன்படுத்தப்பட்டுவிடும். பழைய கோப்புகளை நீக்கி கணினியில் காலி இடங்களை உருவாக்கவும். பிறகு X ஐ பயனர் கணக்கை பயன்படுத்து துவக்க முயலவும்.

C.4.5. உள்நுழைய முயலும் போது சிக்கல்

அமைப்பு முகவர் இல் பயனர் கணக்கை உருவாக்கவில்லையெனில், முதன்மை பயனராக நுழைந்து நீங்கள் ரூட்டுக்காக கொடுத்த கடவுச்சொல்லை பயன்படுத்தவும்

முதன்மை பயனர் கடவுச்சொல் உங்களுக்கு நினைவில்லையெனில், உங்கள் கணினியை linux single என துவக்கவும்.

Itanium பயனர்கள் துவக்க கட்டளையை தொடர்ந்து elilo கட்டளையை உள்ளிடவேண்டும்

நீங்கள் x86-அடிப்படையிலான கணினி மற்றும் GRUB ஐ துவக்க ஏற்றியாக பயன்படுத்தினால் e கட்டளையை உள்ளிட்டு GRUB துவக்க திரையை பார்க்கவும். உங்கள் அமைப்புக்கோப்பில் உள்ள தற்போதைய தேர்வு செய்யப்பட்ட அடையாளக்கோப்பை பார்க்கவும்.

kernel ஐ தேர்வு செய்து e கட்டளையை பயன்படுத்தி திருத்தவும்.

kernel வரியின் கடைசியில் , வரியை சேர்க்கவும்

single

[Enter] விசையை அழுத்தி வெளியேற தயாராகவும்

துவக்க இயக்கி திரைக்கு திரும்பியது b என தட்டச்சு செய்து கணினியை துவக்கவும்

ஒரு பயனர் பாங்கை அடைந்ததும் # ப்ராம்ட் தெரியும். இங்கே passwd root என தட்டச்சு செய்ய வேண்டும். இதன் மூலம் முதன்மை கடவுச்சொல் நிரந்தரமாக மாற்றப்படும். பின் shutdown -r now என தட்டச்சு செய்து கணினியை மீண்டும் துவக்கவும்.

உங்கள் பயனர்கணக்கு கடவுச்சொல்லை நீங்கள் மறந்திருந்தால் , முதன்மை பயனராக கணினியில் நுழையவு. இவ்வாறு நுழைய su - என்ற கட்டளையை தட்டச்சு செய்து பின் கடவுச்சொல்லை உள்ளிடவும். பிறகு passwd <username> என தட்டச்சு செய்யவும். இது புது பயனருக்கான புதிய கடவுச்சொல்லை கேட்கும். கடவுச்சொல்லை உள்ளிடவும்

வரைகலை உள்நுழை திரை தோன்றவில்லையெனில. உங்கள் வன்பொருள் பொருந்தவில்லையா என்பதை பார்க்கவும். வன்பொருள் பட்டியல் ஐ காண:

http://hardware.redhat.com/hcl/

C.4.6. உங்கள் RAM அறியப்பட்டதா?

சிலசமயம், உங்கள் (RAM) நினைவகத்தை கர்னலால் அறிந்துகொள்ள முடியாமல் போகும். cat /proc/meminfo கட்டளையை பயன்படுத்தி இதை தெரிந்துகொள்ளலாம்.

காட்டப்பட்ட RAM அளவும் உங்கள் கணினியின் RAM அளவும் ஒன்றா என்பதை சோதித்து பார்க்கவும். இதற்கு /boot/grub/grub.conf கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்க்கவும்:

mem=xxM

xxஐ உங்கள் கணினியின் மெகாபைட் RAM அளவால் மாற்றவும்.

/boot/grub/grub.conf இல் உள்ள, உதாரணம் பின்வருமாறு இருக்கும்:

#NOTICE: You have a /boot partition. This means that
#        all kernel paths are relative to /boot/
default=0
timeout=30
splashimage=(hd0,0)/grub/splash.xpm.gz
title Red Hat Enterprise Linux (2.4.21-1.1931.2.399.ent)
root (hd0,0)
kernel /vmlinuz-2.4.21-1.1931.2.399.ent ro root=/dev/hda3 mem=128M

கணினியை மீண்டும் துவக்கியதும், grub.conf கோப்பில் செய்த மாற்றங்கள் செயல்படத்துவங்கும்.

GRUB துவக்க திரையை ஏற்றியதும், e கட்டளையை தட்டச்சு செய்து திருத்தவும்.

kernel எனத்துவங்கும் வரியை தேர்வு செய்து e என தட்டச்சு செய்து துவக்க உள்ளீட்டில் திருந்தம் செய்யவும்.

kernel வரியின் கடைசியில், சேர்க்கவும்

mem=xxM

xx ஐ RAM அளவால் மாற்றவும்

[Enter] விசையை அழுத்தி வெளியேறவும்.

துவக்க இயக்கிக்கு திரும்பியதும் b என தட்டச்சு செய்து கணினியை துவக்கவும்

Itanium பயனர்கள் துவக்க கட்டளையை தொடர்ந்து elilo கட்டளையை பயன்படுத்த வேண்டும்.

xx ஐ RAM இன் அளவால் மாற்றி [Enter] விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்.

C.4.7. உங்கள் அச்சியந்திரம் வேலை செய்யவில்லை

உங்களுக்கு அச்சியந்திரத்தை அமைக்க தெரியவில்லை அல்லது அச்சியந்திரம் சரியாக வேலை செய்யவில்லையெனில், அச்சியந்திரம் அமைக்கும் கருவி பயன்பாட்டை பயன்படுத்தவும்.

system-config-printer கட்டளையை கட்டளை வரியில் தட்டச்சு செய்யவும். அச்சியந்திரம் அமைக்கும் கருவி திறக்கும். முதன்மை பயனர் இல்லை எனில் ரூட் கடவுச்சொல் கேட்கும்.

C.4.8. ஒலி அமைப்பில் சிக்கல்

சில சமயம் உங்கள் கணினியில் ஒலி அட்டை இருந்தும் ஒலியை கேட்கமுடியாமல் போகலாம்ஒலி அட்டை அமைக்கும் கருவி .(system-config-soundcard) பயன்பாட்டை இயக்கவும்

ஒலி அட்டை அமைக்கும் கருவி ஐ பயன்படுத்த துவக்க மெனுவில் => கணினி அமைப்புகள் => ஒலி கண்டறிதல் என்பதை தேர்வு செய்யவும். உங்கள் ரூட் கடவுச்சொல்லை கேட்கும்

system-config-soundcard கட்டளையை கட்டளை வரியில் தட்டச்சு செய்து ஒலி அட்டை அமைக்கும் கருவி துவக்கலாம். நீங்கள் முதன்மை பயனர் இல்லையெனில் ரூட் கடவுச்சொல்லை கேட்கும். உள்ளிட்டு தொடரவும்.

உரை-அடிப்படையிலான கருவியை இயக்க sndconfig என முனைய சாளரத்தில் தட்டச்சு செய்யவும். குறிப்பு sndconfig பொதுவாக Red Hat Enterprise LinuxCD-ROM நிறுவலின் போது தானாக நிறுவப்படாது,

ஒலி அட்டை அமைக்கும் கருவி வேலை செய்யவில்லையெனில் (மாதிரி கோப்பு ஒலியெழுப்பவில்லையெனில்), மாற்று வழியும் உள்ளது. ஆனால் இம்முறை ஒலி அட்டை அமைக்கும் கருவி போல் சுலபமானது இல்லை. modules.conf கோப்பை திருத்தலாம்(புதிய பயனர்கள் இந்த உத்தியை கையாள வேண்டாம்) அல்லது உங்கள் ஒலி அட்டையுடன் கொடுத்த ஆவணங்களை படித்துபார்க்கலாம்.

C.4.9. அப்பாச்சி-அடிப்படையிலான httpd service/Sendmail துவங்கும் போது நின்றுவிட்டது.

அப்பாச்சி-அடிப்படையிலான httpd சேவை அல்லது Sendmail துவங்கும் போது நின்றுவிட்டது எனில் /etc/hosts கோப்பில் கீழ்கண்ட வரி இருக்கிறதா என பார்க்கவும்.

127.0.0.1  localhost.localdomain  localhost

C.4.10. NVIDIA சிப்செட்டில் சிக்கல்

உங்களிடம் NVIDIA சிப்செட் இருந்தால் உங்கள் கர்னலை மேம்படுத்தவும். சில சமயம் வீடியோ அட்டையில் வீடியோ வெளியீடு தொடர்பான சிக்கல்கள் நேரும்

இந்த சிக்கல் இருந்தால் NVIDIA சிப்செட்டுக்கான சமீபத்திய கர்னல் இயக்கி கோப்பை பதிவிறக்கம் செய்யவும். மேலும் தகவலுக்கு பார்க்க :

http://www.nvidia.com/view.asp?IO=linux_display_1.0-3123