4.17. x86 , AMD64, மற்றும் Intel® EM64T துவக்க இயக்கி அமைப்பு

ஊடகம் இல்லாமல் கணினியை துவக்க, துவக்க இயக்கியை நிறுவ வேண்டும். கணினி துவங்கும் போது முதலில் இயங்கும் மென்பொருள் துவக்கி இயக்கி நிரலாகும். மென்பொருள்களை ஏற்றுவதும், இயங்கு தள கட்டுப்பாட்டை கர்னலுக்கு அனுப்புவதும், இதன் முக்கிய பணியாகும். கட்டுப்பாடு கர்னலுக்கு அனுப்பப்பட்டதும், கர்னல் மீதமுள்ள நிரல்களை துவக்கும்.

நிறுவலின் போது இயல்பாக நிறுவப்படும் GRUB (GRand Unified Bootloader), மிக சக்திவாய்ந்த துவக்க இயக்கியாகும். GRUB, பல இலவச இயங்குதளங்கள் மற்றும் , தனி உரிமம் பெற்ற இயங்குதளங்களை செயின்-லோடிங் (ஆதரவற்ற இயங்குதளங்களான DOS அல்லது Windows, ஐ மற்ற துவக்க இயக்கியை பயன்படுத்தி துவக்கும்) முறையில் ஏற்ற பயன்படும்.

படம் 4-14. துவக்க இயக்கி அமைப்பு

GRUB ஐ உங்கள் துவக்க இயக்கியாக ஏற்ற விருப்பமில்லை எனில், துவக்க இயக்கியை மாற்று என்பதை க்ளிக் செய்யவும், இங்கே துவக்க இயக்கியை நிறுவாதே என்பதை தேர்வு செய்யலாம்.

Red Hat Enterprise Linux ஐ துவக்குவதற்கான துவக்க இயக்கி ஏற்கெனவே இருந்து, அதன் மேல் தற்போதைய துவக்க இயக்கியை எழுத விருப்பமில்லை எனில் துவக்க இயக்கியை நிறுவாதே என்பதை துவக்க இயக்கியை மாற்று பட்டனை க்ளிக் செய்து தேர்வு செய்யவும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

GRUB நிறுவ வேண்டாம் என்பதை தேர்வு செய்திருந்தால், கணினியை நேரடியாக துவக்க முடியாது, துவக்க வேறு முறையை பயன்படுத்த வேண்டும்(வணிக துவக்க இயக்கிகள்). உங்கள் கணினியை துவக்க வேறு வழி இருந்தால் மட்டுமே இதை தேர்வு செய்யவும்.

மற்ற இயங்குதளங்கள் பயன்படுத்தும் பகிர்வையும் சேர்த்து, துவங்கக்கூடிய பகிர்வுகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளது. உங்கள் கணினியில் root பகிர்வு Red Hat Enterprise Linux இன் அடையாளத்தை கொண்டிருக்கும். மற்ற பகிர்வுகளிலும் துவக்க அடையாளம் இருக்கலாம். மற்ற பகிர்வுகளில் துவக்க அடையாளத்தை சேர்க்க அல்லது மாற்ற நிறுவல் நிரலால் அவைகள் கண்டுபிடிக்கப்படவேண்டும். பகிர்வை தேர்வு செய்ததும் இரு முறை க்ளிக் செய்யவும். அதன் பின் திருத்து பட்டனை பயன்படுத்தி அடையாளப்பெயரை மாற்றலாம்.

கணினிஇயல்பான என்பதை தேர்வு செய்தால் இயல்பாக துவங்கக்கூடிய இயங்குதளம் துவங்கும். துவக்க பிம்பத்தை தேர்வு செய்யாமல் நிறுவலின் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது.

குறிப்புகுறிப்பு
 

வரைகலை இடைமுகம் இல்லாத ஏற்றியில், தேவையான இயங்குதளத்தை துவக்க Label காலம், பூட் ப்ராம்டில் என்ன உள்ளிட வேண்டும் என்பதை பட்டியலில் காட்டும்.

GRUB துவக்க திரையை ஏற்றியதும், அம்புக்குறி விசையை பயன்படுத்தி லேபிலை தேர்வு செய்யவும் அல்லது [e] ஐ அழுத்தி மாற்றங்கள் செய்யவும். நீங்கள் தேர்வு செய்த துவக்க இயக்கியில் அமைப்புக்கோப்புகளின் பட்டியல் தெரியும்.

துவக்க ஏற்றி கடவுச்சொல் உங்கள் சேவகனை மற்றவர்கள் அணுகக்கூடிய சூழல் இருக்கும் போது போதிய பாதுகாப்பை தர பயன்படும்.

துவக்க இயக்கியை நிறுவினால், உங்கள் கணினியை பாதுகாக்க துவக்க இயக்கி கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். துவக்க இயக்கி கடவுச்சொல் இல்லாமல், மற்ற பயனர்கள் உங்கள் கணினியை அணுகினால் கர்னல் பாதுகாப்பை விட்டுக்கொடுக்காது. தரமற்ற துவக்க தேர்வை தேர்வு செய்யும் முன், துவக்க இயக்கி கடவுச்சொல்லை முதலில் உள்ளிட வேண்டும். எனினும் பயனர்கள் மற்ற ஊடகங்களான , CD-ROM, அல்லது USB ஊடகம் அல்லது BIOS ஐ பயன்படுத்தி கணினிக்குள் நுழைய முடியும். எனவே பாதுகாப்பு திட்டங்கள் வேறு முறைகளையும் தீர்வுகளையும் தரவேண்டும்.

கணினியின் பாதுகாப்புகருதி துவக்க இயக்கி கடவுச்சொல்லை பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்திருந்தால் துவக்க இயக்கி கடவுச்சொல் உள்ள பரிசோதனைப்பெட்டியை க்ளிக் செய்யவும்.

தேர்வு செய்ததும், கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.

மேம்பட்ட துவக்க இயக்கி தேர்வை அமைக்க, இயக்கி வரிசை அல்லது கர்னலுக்கான தேர்வுகளை அனுப்புதல் போன்றவைகளை செய்ய மேலதிக துவக்க இயக்கி தேர்வுகள் என்பதை தேர்வு செய்து அடுத்து பட்டனை அழுத்தவும்.

4.17.1. மேம்பட்ட துவக்க இயக்கி அமைப்புகள்

இப்போது நீங்கள் நிறுவ வேண்டிய துவக்க இயக்கியை தேர்வு செய்துவிட்டீர்கள். இனி இவைகள் நிறுவப்பட வேண்டுமா என்பதை கண்டறியவும். துவக்க இயக்கியை நீங்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் நிறுவ வேண்டி வரும்.

படம் 4-15. துவக்க இயக்கி நிறுவல்

குறிப்புகுறிப்பு
 

உங்களிடம் RAID அட்டை இருந்தால், சில BIOS கள் RAID இல் இருந்து துவங்க அனுமதிக்காது. இது போன்ற சூழ்நிலையில், துவக்க இயக்கி RAID அரேவின் MBR இல் இருக்க கூடாது. இதற்கு பதில், துவக்க இயக்கியில், இதே இயக்கியின் MBR இல்/boot/ பகிர்வு உருவாக்கப்பட வேண்டும்.

உங்கள் கணினி Red Hat Enterprise Linux ஐ மட்டும் பயன்படுத்தினால், நீங்கள் MBR ஐ தேர்வு செய்ய வேண்டும்.

இயக்கி வரிசையை மாற்று பட்டனை க்ளிக் செய்து அவைகளின் வரிசையை மாற்றலாம் இல்லையேல் BIOS சரியான வரிசையை தராது. உங்களிடம் பல SCSI ஏற்பிகள் இருந்தால், அல்லது SCSI மற்றும் IDE ஏற்பிகள் இருந்தால், SCSI சாதனத்தில் இருந்து துவக்க விரும்பினால் துவக்க வரிசையை மாற்றலாம்.

LBA32 வலியுருத்து (பொதுவாக அவசியமில்லை) தேர்வு /boot/ பகிர்வு1024 சிலிண்டர் ஐ தாண்ட அனுமதிக்கும். உங்கள் கணினியில் LBA32 விரிவாக்கத்தில் 1024 சிலிண்டர்ரில் துவக்க ஆதரவு இருந்தால் , நீங்கள் /boot/பகிர்வை 1024, சிலிண்டருக்கு மேல் வைக்க விரும்பினால், இந்த தேர்வை பயன்படுத்தவும்.

குறிப்புகுறிப்பு
 

உங்கள் வன்தகட்டை பகிர்க்கும் போது, பழைய கணினியில் உள்ள BIOS வன்தகட்டில் உள்ள உருளைகளில்1024 க்கு மேல் உள்ளதை அணுகாது. இந்த சூழ்நிலையில் /boot க்கு போதுமான இடம் ஒதுக்கி லினக்ஸ் பகிர்வு முதல் 1024 உருளைகளில் துவங்குமாறு செய்ய வேண்டும். மற்ற லினக்ஸ் பகிர்வுகள் 1024 உருளைக்கு பிறகு இருக்கலாம்.

parted, 1024 என்பது 528MB சமமாகும். மேலும் தகவலுக்கும் பார்க்க:

http://www.pcguide.com/ref/hdd/bios/sizeMB504-c.html

துவக்க கட்டளைக்கு இயல்பான தேர்வை சேர்க்க, அவைகளை கர்னல் அளவுரு புலத்தில் உள்ளிடவும். ஒவ்வொரு முறை துவங்கும் போதும் ஏதாவது தேர்வு லினக்ஸ் கர்னலுக்கு அனுப்பப்படும்.

4.17.2. மீட்பு பாங்கு

மீட்பு பாங்கு Red Hat Enterprise Linux ஐ வன்தகட்டில் துவக்குவதற்கு பதில் சிறிய துவக்க ஊடகத்திலோ அல்லது புதிய ஊடகத்திலோ துவக்கும். Red Hat Enterprise Linux இல் உள்ள கோப்புகளை முழுமையாக பார்க்க முடியாத போது இது பயன்படும். Red Hat Enterprise Linux இயக்க முடியாமல் போனாலும் மீட்பு பாங்கை பயன்படுத்தி உங்கள் வன்தகட்டில் உள்ள கோப்புகளை பார்க்கலாம். மீட்பு பாங்கை பயன்படுத்த கீழ்கண்ட கட்டளைகளை முயலவும்.

கூடுதல் தகவலுக்கு Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடுஐ பார்க்கவும்.

4.17.3. மாற்று துவக்க இயக்கி

துவக்க இயக்கியை பயன்படுத்த விருப்பமில்லையெனில், பல மாற்று வழிகள் உள்ளன.

LOADLIN

உங்களால் MS-DOS லிருந்து லினக்ஸை ஏற்ற முடியும். ஆனால் இதற்கு லினக்ஸ் கர்னலின் பதிப்பு (லினக்ஸ் RAM வட்டு மற்றும் SCSI ஏற்பி) MS-DOS பகிர்வில் இருக்க வேண்டும். இதை செய்ய ஒரே வழி Red Hat Enterprise Linux ஐ வேறுசில வழிகளில் துவக்கி(உதாரணம்,CD-ROMயிலிருந்து துவக்கு ) கர்னலை MS-DOS பகிர்வில் நகலெடுக்க வேண்டும். இது LOADLIN இல் கிடைக்கும்.

ftp://metalab.unc.edu/pub/Linux/system/boot/dualboot/ 

மற்ற தொடர்புடைய வலைமனைகள்

SYSLINUX

SYSLINUX என்பது LOADLIN போன்ற ஒரு MS-DOS நிரலாகும். இதைப்பெற கீழ்கண்ட வலைமனை அணுகவும்.

ftp://metalab.unc.edu/pub/Linux/system/boot/loaders/ 

மற்ற தொடர்புடைய வலைமனைகள்

வணிக துவக்க இயக்கி

வணிக துவக்க இயக்கியை பயன்படுத்தி லினக்ஸை ஏற்றலாம். உம், சிஸ்டம் கமாண்டர் மற்றும் பார்டிஷன் மாஜிக் லினக்ஸை துவக்க உதவும்(எனினும் GRUB உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்)

குறிப்புகுறிப்பு
 

துவக்க இயக்கிகளான LOADLIN மற்றும் சிஸ்டம் கமாண்டர் ஆகியவை மூன்றாம் நபர் துவக்க இயக்கிகள் இவைகளுக்கு Red Hat ஆதரவு இல்லை.

4.17.4. SMP மதர்போர்டுகள் மற்றும் GRUB

இந்த பகுதி SMP மதர்போர்டுகளுக்கு மட்டும். SMP,என்பது Symmetric Multiprocessing என்பதன் சுருக்கம். இது பல CPU க்களை பயன்படுத்தி செயல்களை வேகமாக செய்யவைக்க பயன்படும் கணினி கட்டமைப்பு முறை(multiprocessing).

நிறுவல் நிரல் உங்கள் கணினியில் SMP மதர்போர்டை கண்டுபிடித்திருந்தால், இது தானாக இரண்டு துவக்க இயக்கிகளை உருவாக்கும்.

குறிப்புகுறிப்பு
 

SMP கர்னல் தானாக Intel® Pentium® 4 கணினியில் ஹைப்பர் த்ரெடிங் உடன் நிறுவப்படும் .

இரண்டு GRUB உள்ளீடுகள் Red Hat Enterprise Linux (கர்னல் பதிப்பு) மற்றும் Red Hat Enterprise Linux (கர்னல் பதிப்பு-smp). Red Hat Enterprise Linux (கர்னல் பதிப்பு-smp) தானாக துவங்கும். எனிலும், SMP கர்னலில் சிக்கல் இருந்தால் Red Hat Enterprise Linux (கர்னல் பதிப்பில்) இல் துவங்கலாம். முன்பு இருந்த அதே அமைப்புகளை ஒரே ஒரு ப்ராஸஸரோடு பயன்படுத்தலாம்.