4.3. நிறுவல் நிரல் துவங்குகிறது

துவக்க, நிறுவலுக்கு தேவையான அனைத்து வன் மென் பொருள்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஏற்கெனவே தெரிந்திருந்தால், பாடம் 2 இல் உள்ள , முறைகளை பின்பற்றி நிறுவ தயாராகவும். நிறுவலை துவங்க தயாரானதும் Red Hat Enterprise Linux CD-ROM #1 யையோ அல்லது துவக்க ஊடகத்தயோ பயன்படுத்தி நிறுவலை துவங்கவும்.

குறிப்புகுறிப்பு
 

சிலசமயங்களில், நிறுவலின் போது வன்பொருளுக்கு வட்டு இயக்கி தேவைப்படும். வட்டு இயக்கி உங்கள் கணினியின் நிறுவல் நிரலுக்கு தேவையான வன்பொருள் ஆதரவை தரும். கூடுதல் தகவலுக்கு இணைப்பு E ஐ பார்க்கவும்.

4.3.1. x86, AMD64, மற்றும் Intel® EM64T கணினிகளில் நிறுவல் நிரல் துவங்குகிறது

கீழ்கண்ட ஊடகத்தை பயன்படுத்தி நிறுவல் நிரலை துவக்கலாம்( உங்கள் கணினியின் ஆதரவுக்கேற்ப):

துவக்க CD-ROM ஐ உருவாக்க அல்லது USB பேனா இயக்கியை நிறுவலுக்கு தயார்படுத்த பகுதி 2.4.2 ஐ பார்க்கவும்.

துவக்க ஊடகத்தை செருகி கணினியை மீண்டும் துவக்கவும். உங்கள் BIOS அமைப்புகள் CD-ROM அல்லது USB சாதனத்தை அனுமதிக்க வசதியாக மாற்றங்கள் செய்ய வேண்டும்.

குறிப்புசிறு குறிப்பு
 

x86, AMD64, அல்லது Intel® EM64T கணினிகளில் BIOS அமைப்புகளை மாற்ற, உங்கள் கணினி துவங்கியதும் காட்டப்படும் திரையை கவனிக்கவும். BIOS அமைப்புக்கு செல்ல எந்த விசையை பயன்படுத்துவது என்பதை தெரியப்படுத்தும் வரி தோன்றும்.

BIOS அமைப்பு நிரலை அடைந்ததும்,

BIOS லிருந்து வெளியேறும் முன் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும். அதிக தகவலுக்கு, உங்கள் கணினியோடு கொடுக்கப்பட்ட ஆவணத்தை பார்க்கவும்

சிறிது தாமதித்த பின், boot: ப்ராம்ட் உள்ள திரை தோன்றும். திரையில் பல துவக்க தேர்வுகள் இருக்கும். ஒவ்வொரு தேர்விலும் அதற்கான உதவித்திரைகள் இருக்கும். இந்த உதவித்திரைகளை பார்க்க, திரையில் கீழ் உள்ள செயல்பாட்டு விசைகளை பயன்படுத்தவும்.

நிறுவல் நிரலை துவக்கியதும், இரண்டு விஷயங்களை நினைவில்கொள்க

பொதுவாக, [Enter] விசையை அழுத்தி துவக்கவும். உங்கள் லினக்ஸ் கர்னல் வன்பொருளை கண்டறிந்ததும் துவக்க செய்தியை கண்காணிக்கவும். உங்கள் வன்பொருள் சரியாக கண்டறியப்பட்டால்ம் அடுத்த பகுதிக்கு செல்லவும். உங்கள் வன்பொருள் சரியாக கண்டறியப்படவில்லையெனில் நிறுவலை மீண்டும் துவக்கிஇணைப்பு F உள்ள ஏதாவது ஒரு துவக்க தேர்வை பயன்படுத்தவும்.

4.3.2. Itanium கணினியில் நிறுவல் நிரலை துவக்குதல்

உங்கள் Itanium கணினி Red Hat Enterprise Linux நிறுவல் நிரலை Red Hat Enterprise Linux CD #1 லிருந்து தானாக துவக்க வேண்டும். Itanium தானாக நிறுவல் நிரலை CD-ROM லிருந்து துவக்க முடியவில்லை எனில் (வன்தகடு ,NFS, FTP, அல்லது HTTP மூலம் நிறுவ விரும்பினால்) LS-120 வட்டிலிருந்து துவக்க வேண்டும். பகுதி 4.3.2.2 பார்த்து மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளவும்.

4.3.2.1. CD-ROM யிலிருந்து நிறுவல் நிரலை துவக்குதல்

Red Hat Enterprise Linux CD #1லிருந்து துவக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றவும்.

  1. Red Hat Enterprise Linux CD #1 தவிர மற்ற ஊடகங்களை வெளியேற்றவும்.

  2. துவக்க தேர்வு மெனுவில் EFI Shell என்பதை தேர்வு செய்யவும்.

  3. Shell> ப்ராம்டில், CD-ROM கோப்பு அமைப்பை மாற்றவும். உதாரணமாக, மேலே map விளைவு, CD-ROM உள்ள கணினி பகிர்வு fs1 என மாற்ற வேண்டும். fs1 கோப்பு அமைப்புக்கு மாற்ற, fs1: என ப்ராம்டில் தட்டச்சு செய்யவும்.

  4. நிறுவல் நிரலை துவக்க elilo linux என தட்டச்சு செய்யவும்.

  5. பாடம் 4 சென்று நிறுவலை துவங்கவும்.

4.3.2.2. LS-120 வட்டிலிருந்து நிறுவல் நிரலை துவக்குதல்

Itanium Red Hat Enterprise Linux CD #1 லிருந்து துவக்க முடியவில்லையெனில், LS-120 வட்டிலிருந்து துவக்க வேண்டும், வன்தகடு NFS, FTP, அல்லது HTTP நிறுவலை விரும்பினால், LS-120 வட்டிலிருந்து துவங்க வேண்டும்.

LS-120 துவக்க பிம்ப கோப்பு வட்டை CD #1 இல் உள்ள images/boot.img துவக்க பிம்பத்திலிருந்து உருவாக்க வேண்டும். இந்த வட்டை லினக்ஸிலிருந்து உருவாக்க, வெற்று LS-120 வட்டை சொருகி கீழ்கண்ட கட்டளையை ஷெல் ப்ராம்டில் உள்ளிடவும்:

dd if=boot.img of=/dev/hda bs=180k

boot.img ஐ சரியான சாதனப்பெயரோடு முழுபாதையோடும் /dev/hda LS-120 வட்டு இயக்கிக்காக குறிப்பிடவும்.

நீங்கள் Red Hat Enterprise Linux CD, ஐ பயன்படுத்தவில்லையெனில், நிரல் உரைமுறையில் துவங்கும் பின் நீங்கள் சில அடிப்படை தேர்வுகளை தேர்வு செய்ய வேண்டிவரும்.

நிறுவல் நிரலை ஏற்ற CD-ROM ஐ பயன்படுத்தினால், பாடம் 4 இல் உள்ள கட்டளைகளை பயன்படுத்தவும்.

LS-120 வட்டிலிருந்து துவக்க கீழ்கண்ட படிகளை பின்பற்றவும்.

  1. boot. img கோப்பிலிருந்து உருவாக்கிய LS-120 வட்டை சொருகவும். LS-120 இல் துவக்கி உள் CD-ROM நிறுவலை பயன்படுத்தினால் Red Hat Enterprise Linux CD #1 ஐயும் சொருகவும். வன்தகடு, NFS, FTP, அல்லது HTTP நிறுவலை பின்பற்றினால், CD-ROM தேவையில்லை.

  2. துவக்க தேர்வு மெனுவில் EFI Shell என்பதை தேர்வு செய்யவும்.

  3. Shell> ப்ராம்டில், சாதனத்தை LS-120 ஆக மாற்ற கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவும். fs0:, உதாரண map கட்டளையை பயன்படுத்தி மேலுள்ள விளைவு.

  4. நிறுவல் நிரலை துவக்க elilo linux என தட்டச்சு செய்யவும்.

  5. பாடம் 4 சென்று நிறுவலை துவங்கவும்.

4.3.3. கூடுதல் துவக்க தேர்வு

CD-ROM பயன்படுத்தி துவக்கி வரைகலை நிறுவலை பின்பற்றுவதே சுலபமான வழி, இருப்பினும் சில சமயம் வேறு விதமாக துவக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த பகுதி Red Hat Enterprise Linux நிறுவலை துவக்கும் பல சூழல் பற்றி விளக்கும்.

Itanium பயனர்களுக்கு:

Itanium கணினியில் துவக்க இயக்கியை தேர்வுகளை அனுப்ப, கீழ்கண்ட கட்டளையை EFI Shell ப்ராம்டில் உள்ளிடவும்.

elilo linux option

x86, AMD64, மற்றும் Intel® EM64T பயனர்கள்:

x86, AMD64, அல்லது Intel® EM64T கணினிகளில் துவக்க, கீழ் உள்ள துவக்க தேர்வு படிமுறைகளை பின்பற்றவும்.

குறிப்புகுறிப்பு
 

இணைப்பு F இல் இந்த பகுதியில் இல்லாத பல துவக்க தேர்வுகளை தெரிந்துகொள்ளவும்

4.3.3.1. கர்னல் தேர்வு

உங்களால் கர்னல் வழியாக தேர்வுகளை அனுப்ப முடியும். உதாரணமாக, கர்னல் RAM இல் 128 MB யை மட்டும் பயன்படுத்த நிறுவல் துவக்க ப்ராம்டில்; கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்:

linux mem=128M

உரைமுறை நிறுவலுக்கு

linux text mem=128M

பல கணினிகளில், கர்னலுக்கென தனி அளவுருவை அனுப்ப தேவை இருக்காது. கர்னல் தானாகவே நினைவகத்தின் அளவை கண்டுபிடித்துவிடும். எனினும், சோதனைக்காக இந்த கட்டளையை பயன்படுத்தலாம். உதாரணமாக, linux mem=64M அல்லது linux text mem=64M தேர்வை கர்னலில் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நினைவத்துடன் கர்னலை இயக்கலாம்.

இந்த தேர்வுகளை உள்ளிட்டதும், [Enter] விசையை அழுத்தி தேர்வுகளை பயன்படுத்தி துவக்கவும்

உங்கள் வன்பொருள்களை கண்டறிய துவக்க தேர்வுகள் இருந்தால் அவைகளை குறிப்பிடவும். நிறுவல் பகுதியில் துவக்க இயக்கி அமைப்புக்கு இந்த துவக்க தேர்வுகள் பயன்படும் (அதிக தகவலுக்கு பகுதி 4.17 ஐ பார்க்கவும்)